செய்திகள் உலகம்
சிங்கப்பூர் சோதனைச் சாவடியில் மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கு முக அடையாள முறை அறிமுகம்
சிங்கப்பூர்:
சிங்கப்பூரின் நிலச் சோதனைச் சாவடிகளில் மோட்டார் சைக்கிள்களுக்கான அனைத்துத் தானியக்கப் பாதைகளிலும் முக அடையாள முறை அறிமுகம் செய்யப்படவுள்ளது.
விரல்ரேகைக்குப் பதில் முக அடையாளம் பயன்படுத்தப்படும்.
இந்த ஆண்டு 2026 ஜனவரி முதல் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியின் சில மோட்டார்சைக்கிள் பாதைகளில் முக அடையாள முறை சோதனை செய்யப்பட்டது.
இம்மாதம் மார்ச் 31ஆம் தேதி உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் 18 தானியக்கப் பாதைகளில் அறிமுகம் செய்யப்படும்.
பின்னர் அங்குள்ள 70 தானியக்கப் பாதைகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
துவாஸ் சோதனைச் சாவடியில் அந்த முறை இந்த ஆண்டின் 3ஆம் காலாண்டில் தொடங்கும்.
சிங்கப்பூர்க் குடியிருப்பாளர்கள், நீண்டகால அனுமதி அட்டை வைத்திருப்போர், ஏற்கனவே சிங்கப்பூருக்கு வந்தவர்கள் ஆகியோர் முக அடையாள முறையைப் பயன்படுத்தலாம்.
சிங்கப்பூருக்குள் முதல்முறையாக அல்லது புதிய கடப்பிதழைப் பயன்படுத்தி நுழைவோர் அதிகாரிகள் கையாளும் பாதையில் செல்லவேண்டும்,
அங்கு அவர்களின் முகமும் கைரேகையும் பதிவுசெய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதாரம்: மீடியா கோர்ப்
தொடர்புடைய செய்திகள்
March 26, 2026, 5:33 pm
ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல 5 நாடுகளுக்கு ஈரான் அனுமதி
March 26, 2026, 4:27 pm
ஜப்பான் பள்ளியில் அதிர்ச்சி சம்பவம்: மதிய உணவால் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிப்பு
March 26, 2026, 4:22 pm
தாய்லாந்தில் எரிபொருள் ஏற்றுமதிக்கு அரசு கடும் கட்டுப்பாடு
March 26, 2026, 4:20 pm
வங்காளதேசத்தில் கோர விபத்து: 40 பயணிகளுடன் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து
March 26, 2026, 12:21 pm
அமெரிக்காவின் 15 அம்ச அமைதி திட்டத்தை ஈரான் நிராகரித்தது
March 26, 2026, 12:17 pm
ஏப்ரலில் தொடங்கும் இயற்கைச் சீற்றம்: தட்டுப்பாடின்றி உணவு வழங்க இந்தோனேசிய அரசு திட்டம்
March 26, 2026, 10:28 am
மேற்கு ஆசிய பதற்றம்: ஈரான் பயணிகளைத் தற்காலிகமாகத் தடை செய்த ஆஸ்திரேலியா
March 26, 2026, 10:19 am
மனிதநேய உதவி: ஈரான் நெருக்கடிக்கு காஷ்மீரில் பெரும் நிதிசேகரிப்பு
March 25, 2026, 4:06 pm
