செய்திகள் உலகம்
அமெரிக்காவை உலுக்கிய மாற்றுத்திறனாளி வீரரின் கொடூரச் செயல்
மேரிலாந்து:
அமெரிக்காவைச் சேர்ந்த கை, கால்கள் இல்லாத மாற்றுத்திறனாளி ஒருவர், காரில் வாக்குவாதத்தின் போது நண்பர் என்று சந்தேகிக்கப்படும் ஒரு நபரைச் சுட்டுக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
குற்றஞ்சாட்டப்பட்ட டேட்டன் வெபர் (27) என்பவர் அமெரிக்கன் கார்ன்ஹோல் லீக்கின் ஓட்டப்பந்தைய வீரர் ஆவார். தி கார்டியன் செய்தித்தாள், மேரிலாந்தின் லா பிளாட்டாவில் நடந்த வாக்குவாதத்தைத் தொடர்ந்து பிராட்ரிக் வெல்ஸ் (27) என்பவரை கொலை செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
காரை வெபர் ஓட்டிக்கொண்டிருந்த போது வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அவர் துப்பாக்கியால் சுட்டதில் முன் இருக்கையில் அமர்ந்திருந்த பயணி தாக்கப்பட்டதாகவும் பின் இருக்கையில் இருந்த சாட்சியாளர்கள் விசாரணையாளர்களிடம் தெரிவித்ததாக போலிஸ் கூறியது.
சார்லஸ் கவுண்டி ஷெரிஃப் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், வெபர் பின்னர் காரை நிறுத்தி பின் இருக்கையில் இருந்த இரண்டு பயணிகளைப் பாதிக்கப்பட்டவரை வண்டியிலிருந்து வெளியே எடுக்க உதவுமாறு கேட்டுக்கொண்டார் என தெரிவிக்கப்பட்டது.
எனினும், அவர்கள் உதவ மறுத்து காரிலிருந்து இறங்கி அந்த இடத்தை விட்டு சென்றனர். அதே நேரத்தில் வெபர் பாதிக்கப்பட்டவர் இன்னும் காரில் இருக்கும் நிலையில் வண்டியை ஓட்டிச் சென்றார்.
காரில் இருந்த அனைவரும் ஒருவருக்கொருவர் நன்கு அறிந்தவர்கள் என போலிஸ் தெரிவித்தது.
ஏறக்குறைய இரண்டு மணி நேரத்திற்கு பிறகு, ஒரு வீட்டு முற்றத்தில் இறந்தவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக போலிஸுக்கு தகவல் வந்தது. வெல்ஸ் அந்த இடத்திலேயே உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டது.
சார்லஸ் கவுண்டி ஷெரிஃப் அலுவலகத்தின் துப்பறியும் அதிகாரிகள் வெபருக்கு எதிராக தடுப்பு காவல் பெற்று, அவரது காரை வர்ஜீனியாவின் சார்லட்ஸ்வில்லில் கண்டுபிடித்தனர்.
அவர் அருகிலுள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்ததாக கண்டறியப்பட்டது. மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டவுடன், வெபர் அல்பிமார்லே மாவட்ட போலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில் அவர் வெல்ஸைத் தலையில் இரண்டு முறை சுட்டதாகவும் கூறுகின்றன.
வெபர் 2010 ஆம் ஆண்டு கைகள், கால்கள் இல்லாமலேயே மல்யுத்த வீரராகவும் கால்பந்து வீரராகவும் விளையாடியுள்ளார். குழந்தைப் பருவத்தில் கடுமையான பாக்டீரியா தொற்றால் உறுப்புகளை இழந்த அவர் பின்னர் கார்ன்ஹோல் விளையாட்டில் ஒட்டப்பந்தைய வீரராக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 25, 2026, 4:06 pm
மேற்காசிய மோதல்: உர இடையூறு உலக உணவு விநியோகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்: WTO
March 25, 2026, 12:49 pm
எரிபொருள் தட்டுப்பாட்டைத் தடுக்க பிலிப்பைன்ஸ் அதிபர் மார்க்கோஸின் அதிரடி திட்டம்
March 25, 2026, 12:47 pm
பள்ளி வளாகத்தில் துப்பாக்கிச் சூடு: ஆசிரியை உட்பட இருவர் உயிரிழப்பு
March 25, 2026, 12:41 pm
போரினால் சிதைந்த ஆன்மீகச் சின்னம்: அழியும் நிலையில் 'பிரே விஹியர்' வரலாற்றுத் தலம்
March 25, 2026, 12:07 pm
மூச்சுவிடக் கூடத் தகுதியில்லாத நாடா?: உலகின் மிக மோசமான காற்றைக் கொண்ட நாடாக பாகிஸ்தான் முதலிடம்
March 25, 2026, 9:52 am
குவைத் விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்: எரிபொருள் தொட்டியில் தீ
March 25, 2026, 9:51 am
ஹார்முஸ் நீரிணை விவகாரம்: தாய்லாந்து கப்பலுக்கு பயண அனுமதி கிடைத்தது
March 25, 2026, 9:48 am
