நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

எரிபொருள் தட்டுப்பாட்டைத் தடுக்க பிலிப்பைன்ஸ் அதிபர் மார்க்கோஸின் அதிரடி திட்டம்

மணிலா: 

அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் ஈரானுக்கு எதிராக மேற்கொண்டுள்ள போர் நடவடிக்கைகளால், பிலிப்பைன்ஸ் நாட்டின் எரிசக்தி விநியோகத்திற்குப் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து, நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாக்கவும், தடையற்ற எரிசக்தி விநியோகத்தை உறுதி செய்யவும் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்க்கோஸ் ஜூனியர் தேச அளவிலான எரிசக்தி அவசரநிலையைப் பிரகடனம் செய்துள்ளார். இந்த அவசரநிலை ஓராண்டு காலத்திற்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து போக்குவரத்துத் தொழிலாளர்கள், நுகர்வோர் அமைப்புகள் இரண்டு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் திட்டமிட்டுள்ள நிலையில், அரசின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இந்த அவசரநிலை பிரகடனத்தின் மூலம், எரிபொருள், உணவு, மருந்துப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், பெட்ரோலியப் பொருட்களைப் பதுக்குபவர்கள், விலையைச் செயற்கையாக உயர்த்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, பிலிப்பைன்ஸ் நாட்டில் அடுத்த 45 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் இருப்பு உள்ளதாக அந்நாட்டு எரிசக்தித் துறைச் செயலாளர் ஷரோன் காரின் தெரிவித்துள்ளார். 

எரிபொருள் இருப்பை அதிகரிக்கும் நோக்கில், தென்கிழக்கு ஆசிய நாடுகளிடமிருந்து சுமார் பத்து லட்சம் பேரல் எண்ணெயைக் கொள்முதல் செய்ய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 

உலகளாவிய சூழலால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க, தேவைப்பட்டால் ஒப்பந்தங்களுக்கு முன் பணம் செலுத்தி எரிபொருளைப் பெற்றுக்கொள்ளவும் அரசுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset