நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மின்சார மேல்கம்பி கோளாறால் ETS, KTM Komuter சேவைகள் பாதிப்பு

கோலாலம்பூர்: 

மேல்கம்பி உபகரண கோளாறால் இன்று பத்து கேவ்ஸ் முதல் புலாவ் சேபாங் வரையிலான மின்சார ரயில் சேவை (ETS), KTM Komuter சேவைகள் பாதிக்கப்பட்டன.

கெரெத்தாபி தனா மெலாயு பெர்ஹாட் (KTMB) தெரிவித்தபடி, பாத்தாங் பெனார், லாபு நிலையங்களுக்கு இடையே KM434.423-ல் இந்தக் கோளாறு ஏற்பட்டது என்று கெரெத்தாபி தனா மெலாயு பெர்ஹாட் (KTMB) தெரிவித்தார்.

இடையூறைச் சமாளிக்க பல நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

ஜொகூர் பாரு சென்ட்ரலிலிருந்து கோலாலம்பூர் சென்ட்ரலுக்கு செல்லும் ETS ரயில் EP9532 இப்போது சிரெம்பானில் நிறுத்தப்படும். அந்தச் சேவையிலிருந்து வரும் பயணிகள் பேருந்து மூலம் KL சென்ட்ரல், இடைநிலை நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

தெற்கு நோக்கிய ETS சேவைகளுக்கு, KL சென்ட்ரலிலிருந்து JB சென்ட்ரலுக்கு செல்லும் EP9537, EP9579 ரயில்கள் KL சென்ட்ரலிலிருந்து காடூட் வரை பேருந்து  பயன்படுத்தும். பயணிகள் காடூட் நிலையத்திலிருந்து ரயிலில் தொடர்ந்து பயணிக்கலாம்.

இடையூறால் பாதிக்கப்பட்ட பயணிகள் பயணிக்க விரும்பாவிட்டால் டிக்கெட் கவுண்டரில் முழு பணத்தைத் திரும்பப் பெறலாம்.

தொழில்நுட்ப குழுக்கள் ஆய்வு, மீட்பு பணிகளை மேற்கொண்டு வருவதாக KTMB தெரிவித்தது. விரைவில் இயல்பான சேவையை மீண்டும் தொடங்குவதை நிறுவனம் இலக்காக கொண்டுள்ளது.

"பயணிகள் தங்கள் பயணத்தை திட்டமிட்டு, KTMB-ன் அதிகாரப்பூர்வ அகப்பக்கங்கள் மூலம் சமீபத்திய தகவல்களைப் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. நிறுவனத்தின் சமூக ஊடக தளங்களைச் சரிபார்த்து நிலைய ஊழியர்களை அணுகவும் பயணிகளுக்கு கோரப்பட்டுள்ளது.

சேவை இடையூற்றால் ஏற்பட்ட சிரமங்களுக்கு KTMB மன்னிப்பு கேட்டுக்கொண்டது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset