செய்திகள் மலேசியா
செலவுகள் 30% வரை உயர்கின்றன; உலகளாவிய பிரச்சினைகளால் உணவக உரிமையாளர்கள் பாதிப்பு: பிரெஸ்மா தலைவர்டத்தோ மொஹ்சின்
கோலாலம்பூர்:
உலகளாவிய பொருளாதார அழுத்தங்களைத் தொடர்ந்து, உணவு, பானத் துறையில் செயல்பாட்டுச் செலவுகள் அதிகரித்துள்ளதால், உணவகத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பொருட்களின் விலை உயர்வு 10% முதல் 30% வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது என்று பிரெஸ்மாவின் தலைவர் டத்தோ முகமது மொஹ்சின் கூறினார்.
விநியோகச் சங்கிலித் தடைகள், அதிகரித்த தளவாடச் செலவுகள், தொடரும் சர்வதேசப் பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் இந்த நிலைமைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.
இந்த விலை உயர்வில் கோழிக்கறி, காய்கறிகள், சில இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் போன்ற மூலப்பொருட்கள் மட்டுமல்லாமல், பேக்கேஜிங், சமையல் எரிவாயு, பயன்பாட்டுச் செலவுகள் உள்ளிட்ட மூலப்பொருட்கள் அல்லாத பொருட்களும் அடங்கும் என்கிறார் டத்தோ மொஹ்சின்.
இவை குறிப்பிடத்தக்க உயர்வைப் பதிவு செய்துள்ளன. பதிவு செய்யப்பட்ட விலை உயர்வு, பொருட்களின் வகையைப் பொறுத்து மாறுபட்டது.
ஆனால் சராசரியாக இது 10% முதல் 30% வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வுப் போக்கு கடந்த ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து தொடங்கி, தற்போது வரை தொடர்கிறது என்று அவர் கூறினார்.
புவிசார் அரசியல் காரணங்கள், நாணய மாற்று விகித ஏற்ற இறக்கங்கள் இறக்குமதியின் விலையை நேரடியாகப் பாதிப்பதால், நிலைமை தொடர்ந்து அறைகூவலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விலை உயர்வுகள் இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்," என்று அவர் கூறினார்.
முன்னதாக, தற்போதைய உலகளாவிய நிச்சயமற்ற தன்மையால் அதிகரித்த செயல்பாட்டுச் செலவுகள் காரணமாக உணவு நிறுவனங்கள் விலைகளை உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் ஒரு செய்தி வைரலானது.
இருப்பினும், செயல்பாட்டுச் செலவுகள் அதிகரித்த போதிலும், நுகர்வோருக்குச் சுமையாக இருப்பதைத் தவிர்ப்பதற்காகச் சில செலவுகளைத் தாங்களே ஏற்றுக்கொள்வது, அத்துடன் செயல்பாடுகளை மேம்படுத்துதல் மற்றும் கழிவுகளைக் குறைத்தல் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் மூலம் தனது சங்கம் உணவு விலைகளை ஒரு நியாயமான மட்டத்தில் பராமரிக்க முயற்சிப்பதாக டத்தோ மொஹ்சின் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 26, 2026, 12:38 pm
கெஅடிலான் நாடாளுமன்ற உறுப்பினரின் ஈடுபாட்டிற்கு விக்டர் சின்னிடம் ஆதாரம் இருக்கலாம்: ரபிசி நம்பிக்கை
March 26, 2026, 12:37 pm
பாதுகாப்பு பணம் கேட்டதாகக் கூறும் காணொலி குறித்து போலிசில் புகார் அளிக்க ஹன்னா இயோ உத்தரவு
March 26, 2026, 12:14 pm
வறட்சி நீங்கப் பிரார்த்தனை: அராவ் அரண்மனையில் 1,000 பேர் பங்கேற்ற 'அல்-இஸ்திஸ்காராஹ்' தொழுகை
March 26, 2026, 12:13 pm
கூட்டு முயற்சியால் விளைந்த அற்புதம்: கலைநயத்துடன் மிளிரும் 'ஸ்ரீ பெரந்தாவ்' அடுக்குமாடி குடியிருப்பு
March 26, 2026, 12:13 pm
சீன மயானத்தில் பாலியல் ரீதியில் அநாகரிகச் செயல்களில் ஈடுபட்ட ஜோடிக்கு ஓராண்டு சிறைத் தண்டனை
March 26, 2026, 12:12 pm
பெருநாள் பயண அலை: பட்ஜெட் ஹோட்டல்களின் தங்குமிட விகிதங்கள் அதிகரிப்பு
March 26, 2026, 12:11 pm
அம்பாங்கில் குப்பைத் தொட்டியிலிருந்து பெண் குழந்தை கண்டெடுக்கப்பட்டது
March 26, 2026, 12:09 pm
தேசிய முன்னணியில் நீடிப்பதற்கான மஇகாவின் முடிவு தொலைநோக்குடையது: ஜம்ரி
March 26, 2026, 12:07 pm
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலங்கள் வீட்டில் கண்டெடுக்கப்பட்டன
March 26, 2026, 12:05 pm
