செய்திகள் மலேசியா
தொழில்நுட்பப் போரில் மலேசியாவின் முன்னேற்றங்கள்: உலகப் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக மாற்றம்
கோலாலம்பூர்:
மலேசியாவின் தனித்துவமான புவியியல் நிலை, முக்கியமான தொழில்நுட்ப துறைகளில் வலிமை, சர்வதேச அரங்கில் நாட்டின் மதிப்பைக் கணிசமாக உயர்த்தியுள்ளது என்று தேசிய பாதுகாப்பு துறையின் (MKN) இயக்குநர் டத்தோ ராஜா நூர்சிர்வான் சைனல் அபிடின் கூறினார்.
நீண்டகால உலகளாவிய புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மையின் மத்தியில் மலேசியா மேலும் பொருத்தமானதாக மாறுவதாக இந்த முன்னேற்றங்கள் காட்டுகின்றன என்று அவர் தெரிவித்தார்.
சர்வதேச நிலையில் ஆர்வமுள்ள முக்கிய சக்திகளின் கவனத்தை நாடு இப்போது ஈர்க்கிறது என்றும், இது சிக்கலான புதிய சகாப்தத்திற்கான பாதுகாப்பு அணுகுமுறையை மறுவடிவமைக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
"சர்வதேச எண்ணெய் வர்த்தகத்தில் ஏறக்குறைய 30 முதல் 40 சதவீதம் மலேசிய கடல் பகுதி வழியாக செல்கிறது, இதனால் நாடு உலக எரிசக்தி விநியோக சங்கிலியில் ஒரு முக்கியமானதாக விளங்குகிறது" என்று அவர் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.
உலகளாவிய செமிகண்டக்டர் விநியோக சங்கிலியில் மலேசியாவின் ஆதிக்கம், அரிய பூமி தனிமங்கள் உற்பத்தியில் வலுவான சாத்தியக்கூறுகளும் முக்கிய சக்திகளின் கவனத்தை ஈர்க்கிறது என்று அவர் மேலும் கூறினார்.
இந்த அதிகரித்த மதிப்பிற்கு பங்களிக்கும் நான்கு முக்கிய காரணிகளை ராஜா நூர்சிர்வான் கோடிட்டு காட்டினார்.
மலாக்கா நீரிணை, தென் சீனக் கடல் என்ற இரண்டு முக்கியமான வர்த்தக வழிகளையும் ஒட்டி அமைந்துள்ள ஒரே நாடு என்ற தனித்துவமான நிலையில் மலேசியா உள்ளது.
அடுத்த 30 முதல் 40 ஆண்டுகளில் தென்கிழக்கு ஆசியா உலகளாவிய வளர்ச்சி மையமாக மாறும் என்ற கணிப்புகளும் பகுதியின் மையத்தில் உள்ள மலேசியாவிற்கு பயனளிக்கின்றன.
"இந்த நிலை, சர்வதேச உறவுகளில் மிகவும் ஆக்கப்பூர்வமான, சமநிலையான பங்கு வகிக்க மலேசியாவிற்கு வாய்ப்புகளை திறக்கிறது" என்று அவர் கூறினார்.
இந்த நன்மைகள், முக்கியமான தொழில்நுட்ப திறன்களுடன் இணைந்து, தேசிய பாதுகாப்பு பரிமாணங்களுக்கு வழிவகுக்கின்றன.
"செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி பாதுகாப்பில் ஒரு புதிய பரிமாணத்தை அறிமுகப்படுத்துகிறது, ஏனென்றால் மனித வரலாற்றில் முதல் முறையாக படைக்கும் திறன் கொண்ட ஒன்றை நாம் பெற்றுள்ளோம்" என்று அவர் விளக்கினார்.
இது சர்வதேச, உள்நாட்டு பாதுகாப்பு நிலப்பரப்பை அடிப்படையில் மாற்றுகிறது என்று அவர் கூறினார்.
மாறிவரும் அச்சுறுத்தல்கள் குறித்து கருத்து தெரிவித்த ராஜா நூர்சிர்வான், கலப்பு போர்முறையின் தோற்றத்துடன் தற்போதைய நிலப்பரப்பு மிகவும் சிக்கலானதாக உள்ளது என்று தெரிவித்தார்.
மேலும், MKN-ன் பங்கு குறித்து, அமைப்பு அனைத்து சட்ட அமலாக்க முகவர் அமைப்புகளும் ஒழுங்கமைந்த முறையில் செயல்படுவதை உறுதிப்படுத்த கொள்கை, மூலோபாய ஒருங்கிணைப்பு நிலையில் செயல்படுவதாக அவர் வலியுறுத்தினார்.
"இன்றைய மிகவும் சிக்கலான சூழலில், இத்தகைய ஒருங்கிணைப்பு மிகவும் முக்கியமானது. தனித்தனி அறைகளாக இயங்குவது தேசிய பாதுகாப்பு மேலாண்மையில் ஒரு பலவீனம்" என்று அவர் கூறினார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 26, 2026, 12:38 pm
கெஅடிலான் நாடாளுமன்ற உறுப்பினரின் ஈடுபாட்டிற்கு விக்டர் சின்னிடம் ஆதாரம் இருக்கலாம்: ரபிசி நம்பிக்கை
March 26, 2026, 12:37 pm
பாதுகாப்பு பணம் கேட்டதாகக் கூறும் காணொலி குறித்து போலிசில் புகார் அளிக்க ஹன்னா இயோ உத்தரவு
March 26, 2026, 12:14 pm
வறட்சி நீங்கப் பிரார்த்தனை: அராவ் அரண்மனையில் 1,000 பேர் பங்கேற்ற 'அல்-இஸ்திஸ்காராஹ்' தொழுகை
March 26, 2026, 12:13 pm
கூட்டு முயற்சியால் விளைந்த அற்புதம்: கலைநயத்துடன் மிளிரும் 'ஸ்ரீ பெரந்தாவ்' அடுக்குமாடி குடியிருப்பு
March 26, 2026, 12:13 pm
சீன மயானத்தில் பாலியல் ரீதியில் அநாகரிகச் செயல்களில் ஈடுபட்ட ஜோடிக்கு ஓராண்டு சிறைத் தண்டனை
March 26, 2026, 12:12 pm
பெருநாள் பயண அலை: பட்ஜெட் ஹோட்டல்களின் தங்குமிட விகிதங்கள் அதிகரிப்பு
March 26, 2026, 12:11 pm
அம்பாங்கில் குப்பைத் தொட்டியிலிருந்து பெண் குழந்தை கண்டெடுக்கப்பட்டது
March 26, 2026, 12:09 pm
தேசிய முன்னணியில் நீடிப்பதற்கான மஇகாவின் முடிவு தொலைநோக்குடையது: ஜம்ரி
March 26, 2026, 12:07 pm
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலங்கள் வீட்டில் கண்டெடுக்கப்பட்டன
March 26, 2026, 12:05 pm
