நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கெஅடிலான் நாடாளுமன்ற உறுப்பினருக்கு 9.5 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும்: தக்கியூடின்

கோலாலம்பூர்:

பெருநிறுவன மாபியா  என்று அழைக்கப்படும் ஒரு பிரச்சினையை தீர்க்கும் முயற்சிகள் தொடர்பாக, ஒரு கெஅடிலான்  நாடாளுமன்ற உறுப்பினருக்கு 9.5 மில்லியன் ரிங்கிட்  வழங்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து எம்ஏசிசி, போலிஸ்  உடனடியாக விசாரணை நடத்த வேண்டும்.

தேசியக் கூட்டணி  பொதுச் செயலாளர் டத்தோஶ்ரீ தக்கியூடின் ஹசான் இதனை கூறினார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் மிகவும் கவலையளிப்பதாக உள்ளன.

ஏனெனில் அவை ஒரு பெரிய தொகையை உள்ளடக்கியது மட்டுமல்லாமல், பெருநிறுவன ஆளுகை, அரசியல் செல்வாக்கைத் தவறாகப் பயன்படுத்துதல், தேசிய நிறுவனங்களின் நேர்மை ஆகியவை குறித்தும் கடுமையான கேள்விகளை எழுப்புகின்றன.

மிகவும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், இந்தக் குற்றச்சாட்டுகளின்படி, பெருநிறுவன விவகாரங்களில் அரசியல் தலையீட்டைக் கோரும் நோக்கத்திற்காக இந்தப் பணம் கொடுக்கப்பட்டுள்ளது.

இது உண்மையாக இருந்தால், அரசாங்கம் வலியுறுத்தி வரும் நல்லாட்சி மற்றும் நேர்மையின் கொள்கைகளை இது கடுமையாக மீறுவதாகும்.

மேலும், பெருநிறுவன விவகாரங்களிலும் சட்ட அமலாக்கச் செயல்முறையிலும் தலையிட அரசியல் செல்வாக்கு பயன்படுத்தப்படுகிறது என்ற ஒரு தோற்றத்தை இது உருவாக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது.

எந்தவொரு தரப்பு அல்லது தனிநபரின் தலையீடுமின்றி உண்மை நிலைநாட்டப்படுவதை உறுதிசெய்யும் வகையில், எம்ஏசிசி, போலிஸ் ஆகியவை எவ்வித மூடிமறைப்புமின்றி, முழுமையான, சுதந்திரமான மற்றும் வெளிப்படையான விசாரணையை உடனடியாக நடத்த வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது என்று அவர் ஒரு ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset