செய்திகள் மலேசியா
சமையலறை அல்ல... இது போர்க்களம்: மரண பயத்தை வென்ற பாதுகாப்பு படை பெண் அதிகாரிகள்
கோலா நேரூஸ்:
பெரும்பாலானோருக்குப் பாம்பைக் காண்பது அச்சத்தைத் தூண்டுகிறது, ஆனால் திரங்கானுவில் உள்ள சிவில் பாதுகாப்பு படை (APM) அதிகாரிகளுக்கு, விஷமுள்ள ஊர்வன இனங்களை எதிர்கொள்வது சமூகத்தைப் பாதுகாக்கும் வழக்கமான பணியின் ஒரு பகுதியாக மாறிவிட்டது.
இரண்டாம் லெப்டினன்ட் ஃபாரா நாடியா அப்துல்லா, தன் 16 ஆண்டு கால பணியில் ராஜ நாகங்கள், மலைப்பாம்புகள் உட்பட 700-க்கும் மேற்பட்ட பாம்புகளைக் கையாண்டுள்ளார். 38 வயதான இந்த அதிகாரி, பாதுகாப்பான நடவடிக்கைகளுக்கு துணிச்சலும் ஊர்வன இனங்களின் நடத்தையை புரிந்துகொள்வதும் மிகவும் முக்கியம் என்று கூறினார்.
"பாம்பு கையாளுதலில் திறமையான ஒரு சக அதிகாரியிடமிருந்து அவற்றின் நடத்தையைப் புரிந்துகொண்டு பாதுகாப்பாக அடக்குவது எப்படி என்று கற்றுக்கொண்டேன்" என்று அவர் பெர்னாமாவிடம் தெரிவித்தார். பாம்புகளைக் கண்ட போதே பாம்பின் ஆக்கிரமிப்பை மதிப்பிடுவதாகவும் மேலும் ராஜ நாகங்கள் தீவிர தன்மை, வேகத்தால் மிகவும் சவாலானவை என்றும் அவர் தெரிவித்தார்.
பாம்பு பிடிப்பதில் புகழ்பெற்ற தன் காலமான தாத்தாவிடமிருந்து இந்தத் திறனைப் பெற்றுள்ளார். பெண்களும் இந்தத் துறையில் சிறந்து விளங்க முடியும் என்பதை நிரூபிக்க ஃபாரா நாடியா உறுதியாக உள்ளார். இந்தக் கருத்தை இளநிலை அதிகாரி நூரின் குர்ராத்து ஐன் நோரோஜியும் பகிர்ந்துகொள்கிறார்.
2022-ல் APM-ல் சேர்ந்த நூரின் குர்ராத்து ஐன், ஒருபோதும் பாம்புகளைக் கண்டு பயந்ததில்லை என்று கூறுகிறார். விஷமுள்ள, பெரிய பாம்புகளைப் பிடித்து இடமாற்றும் நூற்றுக்கணக்கான நடவடிக்கைகளில் பங்கேற்றுள்ளார். புதிய ஆட்கள் உண்மையான நடவடிக்கைகளுக்கு முன்பு அனுபவமிக்க அதிகாரிகளால் கட்டம் கட்டமாக பயிற்சி பெறுகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.
" பாதுகாப்பு படை (APM)-ல் சேர்வதற்கான என் முடிவைச் சிலர் கேள்வி எழுப்பி, என்னைப் போன்ற பெண்கள் சமையலறையிலோ அலுவலகத்திலோ இருக்க வேண்டும் என்று கூறினார்கள்" என்று அவர் சொன்னார். பொதுமக்கள் பாதுகாப்பில் தன் ஆர்வத்தையும் அர்ப்பணிப்பையும் காட்டுவதன் மூலம் தன் நிலை குறித்து கவலையடைந்த பெற்றோரைச் சமாதானப்படுத்தி, இறுதியில் அவர்களின் ஆதரவை பெற்றதாக அவர் கூறினார்.
APM துணை இயக்குநர் (நடவடிக்கைகள்) மேஜர் முஹம்மத் ஹாஃபிஸ் ஆசிகின், மாநிலத்தின் 380 பணியாளர்களில் 100 பேர் பெண்கள் என்றும், கிட்டத்தட்ட அனைவரும் விஷமுள்ள விலங்குகளைக் கையாள பயிற்சி பெற்றவர்கள் என்றும் கூறினார். அனைத்து புதிய ஆட்களும் மாநில அல்லது தலைமையகப் பயிற்சி மையங்களில் அடிப்படை, சிறப்பு விலங்கு கையாளுதல் பாடநெறிகளை முடிக்க வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
"இந்த அணுகுமுறையின் மூலம், புதிய ஆட்கள் முதலில் கவனிப்பதில் பயிற்சி பெறுகின்றனர், பின்னர் அவர்களின் அனுபவம், திறமையின் அடிப்படையில் நடவடிக்கைகளை முழுமையாக வழிநடத்த நம்பகமானவர்களாக உருவாகின்றனர்" என்று அவர் கூறினார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 26, 2026, 12:38 pm
கெஅடிலான் நாடாளுமன்ற உறுப்பினரின் ஈடுபாட்டிற்கு விக்டர் சின்னிடம் ஆதாரம் இருக்கலாம்: ரபிசி நம்பிக்கை
March 26, 2026, 12:37 pm
பாதுகாப்பு பணம் கேட்டதாகக் கூறும் காணொளி குறித்து போலிசில் புகார் அளிக்க ஹன்னா இயோ உத்தரவு
March 26, 2026, 12:13 pm
கூட்டு முயற்சியால் விளைந்த அற்புதம்: கலைநயத்துடன் மிளிரும் 'ஸ்ரீ பெரந்தாவ்' அடுக்குமாடி குடியிருப்பு
March 26, 2026, 12:13 pm
சீன மயானத்தில் பாலியல் ரீதியில் அநாகரிகச் செயல்களில் ஈடுபட்ட ஜோடிக்கு ஓராண்டு சிறைத் தண்டனை
March 26, 2026, 12:12 pm
பெருநாள் பயண அலை: பட்ஜெட் ஹோட்டல்களின் தங்குமிட விகிதங்கள் அதிகரிப்பு
March 26, 2026, 12:11 pm
அம்பாங்கில் குப்பைத் தொட்டியிலிருந்து பெண் குழந்தை கண்டெடுக்கப்பட்டது
March 26, 2026, 12:09 pm
தேசிய முன்னணியில் நீடிப்பதற்கான மஇகாவின் முடிவு தொலைநோக்குடையது: ஜம்ரி
March 26, 2026, 12:07 pm
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலங்கள் வீட்டில் கண்டெடுக்கப்பட்டன
March 26, 2026, 12:05 pm
அந்நியத் தொழிலாளர்கள் விவகாரத்தில் இந்திய உணவகங்களுக்கு எதிராக மற்றொரு பாகுபாடு: பிரிமாஸ்
March 26, 2026, 11:15 am
