நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

"லெபனானிலும் போர்நிறுத்தம் வேண்டும்": மலேசியாவின் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் வலியுறுத்தினார்

கோலாலம்பூர்: 

மேற்காசிய மோதலில் நிலவும் போர்நிறுத்தம் லெபனானையும் உள்ளடக்கும் வகையில் விரிவாக்கப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

லெபனான் பிரதமர் நவாஃப் சலாமுடன் நடத்திய தொலைபேசி உரையாடலில் இந்த நிலைப்பாட்டை தெரிவித்ததாக அன்வர் கூறினார். மேலும் லெபனானில் ஏற்பட்டுள்ள கடுமையான தாக்கத்தையும் சுட்டிக்காட்டினார்.

மோதலால் நாட்டில் ஏறக்குறைய ஒரு மில்லியன் பேர் இடம்பெயர்ந்துள்ளதுடன் 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

"லெபனானுக்குகான மலேசியாவின் ஆதரவை நான் மீண்டும் உறுதிப்படுத்தினேன், பொதுமக்கள் உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்களை கண்டித்தேன், மேலும் பதற்றங்களைக் குறைத்து உரையாடலுக்குத் திரும்புமாறு அனைத்து தரப்பினரையும் வலியுறுத்தினேன், நாளுக்கு நாள் அவசரமடைந்துவரும் மனிதாபிமான சூழ்நிலையையும் கவனிக்குமாறு கேட்டுக்கொண்டேன்" என்று அன்வர் முகநூல் பதிவில் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் லெபனான் இடைக்காலப் படை (UNIFIL) கீழ் பணிபுரியும் மலேசிய பட்டாலியன் (MALBATT) அங்கத்தினர்களின் பாதுகாப்பு, நலனை உறுதிப்படுத்துவதில் லெபனான் அரசாங்கம் வழங்கிய ஆதரவிற்கு அவர் நன்றியும் கூறினார்.

"உரையாடலை முடிக்கும் வேளையில், பிராந்திய அமைதியையும் உறுதியான நிலையையும் மீட்டெடுக்க லெபனான், சர்வதேச பங்காளிகளுடன் தொடர்ந்து செயல்படுவதற்கான மலேசியாவின் உறுதிப்பாட்டை தெரிவித்தேன்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மார்ச் 2-ல் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா குழுவின் எல்லை கடந்த தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேல் தென் லெபனானில் வான்வழி தாக்குதல்கள் நடத்தி நிலப்படையெடுப்பு மேற்கொண்டதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலின் தாக்குதல்களில் இதுவரை குறைந்தது 1,039 பேர் உயிரிழந்து, 2,876 பேர் காயமடைந்துள்ளதாக லெபனான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset