நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இரண்டு மணிநேரம் மீறினால் அபாயம்: பெருநாள் உணவுகளில் விஷத்தன்மை எச்சரிக்கை

கோலாலம்பூர்:

பெருநாள் காலங்களில் உணவுகளை அறை வெப்பத்தில் நீண்ட நேரம் வைப்பது உணவுக் கழிவுநச்சு அபாயத்தை அதிகரிக்கும் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இரண்டு மணிநேரத்திற்கு மேல் வைக்கப்படும் உணவுகளில் கிருமிகள் வேகமாக பெருகி, அவை விரைவில் கெடக்கூடும் என்று நுண்ணுயிரியல் நிபுணர் தெரிவித்தார்.

சிறப்பாக, ரெண்டாங், கறி, மீ கறி போன்ற தண்ணீர் அளவு அதிகமுள்ள, தேங்காய் பால் சேர்க்கப்பட்ட உணவுகள் எளிதில் கெடக்கூடியவை. சுமார் 30 முதல் 32 செல்சியஸ் வரை உள்ள சூழல் வெப்பநிலை கிருமி வளர்ச்சிக்கு ஏற்றதாக இருப்பதால், சமைத்த உணவுகளை நீண்ட நேரம் வெளியே வைப்பது ஆபத்தானதாகும்.

மேலும், உணவு தயாரிப்பில் ஏற்படும் குறுக்குத் தொற்றும் முக்கிய காரணமாகும். ஒரே பலகையை காய்கறி, சமைக்காத இறைச்சி வெட்ட பயன்படுத்துவது, அல்லது சுத்தமில்லாத கருவிகள், கைகளால் உணவு கையாளுவது கிருமி பரவலுக்கு வழிவகுக்கும்.

உணவுக் கழிவுநச்சின் அறிகுறிகளாக வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கம், வயிற்றுவலி போன்றவை காணப்படும். குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர். 

அறிகுறிகள் நீடித்தால் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும் என்றும், உணவில் புளிப்பு வாசனை, பிசுபிசுப்பு அல்லது மாற்றமான சுவை இருந்தால் அதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset