செய்திகள் மலேசியா
குப்பைகளை கலைகளாக மாற்றிய முதியவர்; லைட்டர்களால் சுவர் அலங்காரம்
கோலா திரெங்கானு:
கோலா திரெங்கானுவில், 71 வயதான இஸ்மாயில் ஹசன், கடந்த மூன்று ஆண்டுகளாக சேகரித்த சுமார் 4,000 கைவிடப்பட்ட லைட்டர்களைக் கொண்டு தனது வீட்டுச் சுவர்களை அலங்கரித்து வருகிறார். கம்போங் பெக்கா பகுதியைச் சேர்ந்த இவர், பழமையான ஆர்வத்தை சமீப காலங்களில் முழுமையாக செயல்படுத்தியதாக தெரிவித்தார்.
தனது ஓய்வு நேரங்களில் சைக்கிள் ஓட்டும் போது, பொதுமக்கள் கூடும் இடங்களில் கைவிடப்பட்ட லைட்டர்களை சேகரிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். நண்பர்களிடமிருந்தும் கிடைக்கும் பழைய லைட்டர்கள் அவரது சேகரிப்பை மேலும் அதிகரித்துள்ளன.
பயன்படுத்தக்கூடிய லைட்டர்களை தனியாக வைத்துக்கொண்டு, செயலிழந்தவற்றை சுவர் அலங்காரமாக மாற்றுகிறார். கம்பி, மீன்பிடி நூலை பயன்படுத்தி அவற்றை ஒழுங்காக கட்டி அமைப்பதால், சீரான தோற்றத்துடன் எளிதில் மாற்றக்கூடியதாக உள்ளது.
இன்னும் சுவர் முழுவதும் நிரம்பாததால், லைட்டர்கள் சேகரிப்பு தொடர்ந்து நடைபெறுகிறது. மறுசுழற்சி வீடொன்றை பார்த்து ஈர்க்கப்பட்ட இவர், கைவிடப்பட்ட பொருட்களை கலை வடிவமாக மாற்றுவது தனக்கு மிகுந்த திருப்தி அளிப்பதாக கூறினார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 26, 2026, 12:38 pm
கெஅடிலான் நாடாளுமன்ற உறுப்பினரின் ஈடுபாட்டிற்கு விக்டர் சின்னிடம் ஆதாரம் இருக்கலாம்: ரபிசி நம்பிக்கை
March 26, 2026, 12:37 pm
பாதுகாப்பு பணம் கேட்டதாகக் கூறும் காணொளி குறித்து போலிசில் புகார் அளிக்க ஹன்னா இயோ உத்தரவு
March 26, 2026, 12:14 pm
வறட்சி நீங்கப் பிரார்த்தனை: அராவ் அரண்மனையில் 1,000 பேர் பங்கேற்ற 'அல்-இஸ்திஸ்காராஹ்' தொழுகை
March 26, 2026, 12:13 pm
கூட்டு முயற்சியால் விளைந்த அற்புதம்: கலைநயத்துடன் மிளிரும் 'ஸ்ரீ பெரந்தாவ்' அடுக்குமாடி குடியிருப்பு
March 26, 2026, 12:13 pm
சீன மயானத்தில் பாலியல் ரீதியில் அநாகரிகச் செயல்களில் ஈடுபட்ட ஜோடிக்கு ஓராண்டு சிறைத் தண்டனை
March 26, 2026, 12:12 pm
பெருநாள் பயண அலை: பட்ஜெட் ஹோட்டல்களின் தங்குமிட விகிதங்கள் அதிகரிப்பு
March 26, 2026, 12:11 pm
அம்பாங்கில் குப்பைத் தொட்டியிலிருந்து பெண் குழந்தை கண்டெடுக்கப்பட்டது
March 26, 2026, 12:09 pm
தேசிய முன்னணியில் நீடிப்பதற்கான மஇகாவின் முடிவு தொலைநோக்குடையது: ஜம்ரி
March 26, 2026, 12:07 pm
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலங்கள் வீட்டில் கண்டெடுக்கப்பட்டன
March 26, 2026, 12:05 pm
