செய்திகள் மலேசியா
9.5 மில்லியன் ரிங்கிட் ஊழல் உட்பட எந்த பிரச்சினைக்கும் வாய் திறக்காத தற்போதைய எதிர்க்கட்சி தான் மிகவும் பயனற்றது: கைரி
கோலாலம்பூர்:
தற்போதைய எதிர்க்கட்சி தான் மிகவும் பயனற்றது என்று முன்னாள் அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.
எதிர்க்கட்சி முன்னிலைப்படுத்த வேண்டிய பல உள்ளூர், வெளிநாட்டுப் பிரச்சினைகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக மேற்கு ஆசியாவில் தொடரும் மோதல்களால் ஏற்பட்ட உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை சுட்டிக்காட்டியதோடு மட்டுமல்லாமல்,
பெருநிறுவன மாஃபியா ஊழல் தொடர்பாக ஒரு கெஅடிலான் நாடாளுமன்ற உறுப்பினர் 9.5 மில்லியன் ரிங்கிட் பெற்றதாக தொழிலதிபர் விக்டர் சின் சமீபத்தில் சுமத்திய குற்றச்சாட்டுகளையும் கைரி குறிப்பிட்டார்.
நேற்று பெருநிறுவன மாபியா தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதாக உறுதியளித்த ஒரு கெஅடிலான் நாடாளுமன்ற உறுப்பினருக்கு, தான் 9.5 மில்லியன் ரிங்கிட் கொடுத்ததாக விக்டன் சின் கூறினார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 18 அன்று 9.5 மில்லியன் ரிங்கிட் செலுத்தியதாகக் கூறி, மார்ச் 30க்குள் அந்தப் பணம் திருப்பித் தரப்படாவிட்டால், அந்த நாடாளுமன்ற உறுப்பினரின் அடையாளத்தை வெளிப்படுத்துவதாக சின் மிரட்டினார்.
இத்தகைய நெருக்கடியின் மத்தியில் முறையான கட்டுப்பாடுகளையும் சமநிலைகளையும் உறுதி செய்வதில் எதிர்க்கட்சிகள் பிரகாசிப்பதற்கு ஒரு சிறந்த மேடை அமைக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள அவர்கள் மிகவும் முட்டாள்களாகவும் திறமையற்றவர்களாகவும் இருக்கிறார்கள் என்று கைரி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 25, 2026, 10:16 pm
மானியமில்லா ரோன் 97, ரோன் 95 பெட்ரோல் விலைகள் 60 சென்னாக உயர்வு
March 25, 2026, 10:15 pm
வயலின் பட்டமளிப்பு கச்சேரியில் 200 மாணவர்கள் பங்கேற்றனர்
March 25, 2026, 7:02 pm
பாசார் செனியில் 12 வயது சிறுவன் மீது கொடூரத் தாக்குதல்
March 25, 2026, 6:09 pm
நாம் அமைதியாக இருந்தால், மக்கள் அதை உண்மை என்று நினைப்பார்கள்: டத்தோஶ்ரீ ரமணன்
March 25, 2026, 6:09 pm
நான் இன்னும் கேசியோ கைக்கடிகாரம் தான் அணிந்திருக்கிறேன்: ஃபஹ்மி
March 25, 2026, 6:08 pm
மேற்கு ஆசிய மோதல்; போர்நிறுத்தத்தின் முக்கியத்துவத்தை மலேசியா வலியுறுத்துகிறது: முஹம்மது ஹசான்
March 25, 2026, 6:07 pm
பெருநிறுவன மாபியா விவகாரம்; சட்ட அமலாக்க அமைப்பில் சதி உள்ளது: ரபிசி
March 25, 2026, 6:06 pm
