நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அமெரிக்க - ஈரான் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கான பாகிஸ்தானின் முன்மொழிவு வரவேற்கத்தக்கது: பிரதமர் அன்வார்

புத்ராஜெயா:

அமெரிக்க - ஈரான் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கான பாகிஸ்தானின் முன்மொழிவு  வரவேற்கத்தக்கது

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

பாகிஸ்தான் பிரதமர் ஷஹ்பாஷ் ஷெரீஃபையும், அத்துடன் இராஜதந்திர முயற்சிகளைத் திரட்ட முன்வந்துள்ள பிற நட்பு நாடுகளின் தலைவர்களையும் பிரதமர் அன்வார் பாராட்டினார்.

இஸ்லாமிய உலகில் ஒரு நம்பகமான குரலாக'பாகிஸ்தான் இருப்பதால், அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகளுக்கு உகந்த சூழலை உருவாக்க உதவுவதில் அந்நாடு ஒரு வலுவான நிலையில் உள்ளது.

இந்தச் சலுகை முன்வைக்கப்பட்ட அதே உற்சாகத்துடன் அமெரிக்காவும் ஈரானும் அதை வரவேற்க வேண்டும்.

இன்னும் முழுமையானதாக இல்லாவிட்டாலும், ராஜதந்திரத்திற்கு இன்னும் இடமிருக்கிறது என்பதற்கான இந்த அறிகுறியை நான் எச்சரிக்கையான நம்பிக்கையுடன் பார்க்கிறேன். 

இந்த வாய்ப்பை மிகுந்த தீவிரத்துடன் பயன்படுத்த வேண்டும் என பிரதமர் முகநூல் பதிவில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset