நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வயலின் பட்டமளிப்பு கச்சேரியில் 200 மாணவர்கள் பங்கேற்றனர்

கோலாலம்பூர்:

ஒரே சமயத்தில் 200 மாணவர்கள் வயலின் இசைப் படைப்பை அரங்கேற்றி மிகப் பெரிய சாதனையை படைத்திருக்கின்றனர்.

அண்மையில் பிரிக்பீல்ட்ஸ் டெம்பள் ஆப் பைன்ஸ் ஆர்ட்ஸ் கலை கல்லூரியின் சதாநந்தா மண்டபத்தில் இந்த அரங்கேற்றம் நடைபெற்றது.

ஸ்ரீ ராகவேந்திரா ஆர்ட்ஸ் அகாடமி இசைக்  கல்லூரியின் ஏற்பாட்டில் மாணவர்கள் வயலின் இசையை படைத்தனர்.
மாஸ்டர் விக்ரம் பிரபாகரிடம் வயலின்  இசைப் படைப்பை கற்ற தேர்ந்தனர்.

அன்றைய தினம் வயலின் பட்டமளிப்பு கச்சேரியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

ஏற்கெனவே அந்த கலை கல்லூரி பல்வேறு சாதனைகளை படைத்திருக்கின்றன.

மலேசிய சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளன.

நாங்கள் சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறோம். தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் வயலின் இசையை கற்றுத் தர தயாராக இருக்கிறோம் என்று அந்த கல்லூரியின் நிர்வாகிகள் தெரிவித்தன.

குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருப்பதற்காக மாணவர்களை இசைப் பக்கம் கொண்டு வருவது எங்களின் நோக்கமாக இருக்கிறது.

இசையின் மீது ஆர்வமும் கவனமும் செலுத்துவதன் மூலமாக மாணவர்கள் மத்தியில் நன்னெறி பண்புகளை ஏற்படுத்த முடியும் என்று  மாஸ்டர் விக்ரம் பிரபாகர் தெரிவித்தார்.

இதற்கிடையே இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோர்களுடன் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டு தங்களின் ஆதரவை வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset