செய்திகள் மலேசியா
மானியமில்லா ரோன் 97, ரோன் 95 பெட்ரோல் விலைகள் 60 சென்னாக உயர்வு
புத்ராஜெயா:
நாளை முதல் நாடு முழுவதும் மானியமில்லா ரோன் 97, ரோம் 95 பெட்ரோல் விலை 60 சென் உயரும்.
அதே நேரத்தில் தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை 80 சென்னாக உயரும்.
தற்போது ஒரு லிட்டர் 4.55 ரிங்கிட்டாக உள்ள ரோன் 97 விலை, இனி ஒரு லிட்டர் 5.15 ரிங்கிட்டாக நிர்ணயிக்கப்படும் என்று நிதி அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், மானியமில்லா ரோம் 95 விலை, ஒரு லிட்டர் 3.27 ரிங்கிட்டில் இருந்து உயர்ந்து, இனி ஒரு லிட்டர் 3.87 ரிங்கிட்டாக நிர்ணயிக்கப்படும்.
தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை லிட்டருக்கு 4.72 ரிங்கிட்டில் இருந்து 5.52 ரிங்கிட்டாக உயர்த்தப்படும்.
பூடி 95 திட்டத்தின் கீழ் மானிய விலையில் வழங்கப்படும் ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1.99 ரிங்கிட் என்ற விலையிலேயே தொடரும்.
அதே சமயம் சபா, சரவா, லாபுவானில் டீசல் விலை லிட்டருக்கு 2.15 ரிங்கிட் என்ற விலையிலேயே தொடரும்.
இந்த விலை ஏப்ரல் 1 வரை அமலில் இருக்கும் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 25, 2026, 10:15 pm
வயலின் பட்டமளிப்பு கச்சேரியில் 200 மாணவர்கள் பங்கேற்றனர்
March 25, 2026, 7:02 pm
பாசார் செனியில் 12 வயது சிறுவன் மீது கொடூரத் தாக்குதல்
March 25, 2026, 6:09 pm
நாம் அமைதியாக இருந்தால், மக்கள் அதை உண்மை என்று நினைப்பார்கள்: டத்தோஶ்ரீ ரமணன்
March 25, 2026, 6:09 pm
நான் இன்னும் கேசியோ கைக்கடிகாரம் தான் அணிந்திருக்கிறேன்: ஃபஹ்மி
March 25, 2026, 6:08 pm
மேற்கு ஆசிய மோதல்; போர்நிறுத்தத்தின் முக்கியத்துவத்தை மலேசியா வலியுறுத்துகிறது: முஹம்மது ஹசான்
March 25, 2026, 6:07 pm
