நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாசார் செனியில் 12 வயது சிறுவன் மீது கொடூரத் தாக்குதல்

கோலாலம்பூர்: 

"நான் முதலில் பாசார் செனியில் உள்ள 'Roti பாய்' கடையில் ரொட்டி வாங்க சென்றேன், திடீரென்று தெரியாத ஒரு ஆண் கவுண்டரின் முன்பாக என்னை அறைந்தான், நான் தரையில் விழுந்தேன்" என்று 12 வயது ஃபர்ஹான் நசிர் முஹம்மட் ஈசா கூறினார்.

மதியம் 1.35 மணிக்கு நடந்த அந்தச் சம்பவத்தில், வரிசையில் யாரும் இல்லாததைப் பார்த்த ஃபர்ஹான் நேரடியாக கவுண்டரில் ரொட்டி வாங்க சென்றார்.

அப்போது தெரியாத ஒரு ஆண் வந்து உணவை பார்த்துக்கொண்டிருந்தான், பிறகு திடீரென்று அவன் முகத்தில் அறைந்தான் என்று அந்தச் சிறுவன் கூறியுள்ளார்.

"அறையப்பட்டதால் நான் தரையில் விழுந்தேன், அந்த நேரத்தில் தலை, காதில் வலி ஏற்பட்டது.

"ஏன் அறைந்தாய் என்று அவனிடம் கேட்டேன், அதற்கு அவன் நான் வரிசையைக் கடந்து வந்தேன் என்று கூறினான், ஆனால் அந்த நேரத்தில் கவுண்டரில் யாரும் வரிசையில் இல்லை" என்று இன்று ஹாரியன் மெட்ரோவிடம் பேசும்போது அவன் தெரிவித்தான்.

மேலும் நடவடிக்கைக்காக டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் அவன் கூறினான்.

"நேற்று குடும்பத்தினர் என்னை கோலாலம்பூர் மருத்துவமனைக்கு (HKL) சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர், இன்று X-Ray அறிக்கைக்காக காத்திருக்கிறேன்" என்று அவன் கூறினான்.

இதற்கிடையே, அவனது தந்தை முஹம்மத் ஈசா, வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பியப் பிறகுதான் இந்தச் சம்பவம் குறித்து தனக்கு தெரிந்தது என்று தெரிவித்தார்.

"பிறகுதான் மகன் நடந்ததைச் சொன்னான். அந்த ஆண் ஒரு டாக்சி ஓட்டுனராக இருக்கலாம் என்று sசந்தேகிக்கிறேன், ஆனால் உறுதியாகத் தெரியவில்லை," என்று அவர் கூறினார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset