நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெருநாள் விடுமுறை முடிவு: கிள்ளான் பள்ளத்தாக்கை நோக்கி போக்குவரத்து அதிகரித்து வருகிறது

கோலாலம்பூர்: 

இன்று காலை முக்கிய நெடுஞ்சாலைகளில் கிள்ளான் பள்ளத்தாக்கு நோக்கி செல்லும் போக்குவரத்து சீராகவும் கட்டுப்பாட்டுடனும் நடைபெற்று வருகிறது.

மலேசிய நெடுஞ்சாலை வாரியத்தின் பேச்சாளர் தெரிவித்ததாவது, ஹரிராயா விடுமுறைக்குப் பிறகு மக்கள் வீடு திரும்பத் தொடங்கியுள்ளதால், நண்பகலிலிருந்து இரவு வரை கிள்ளான் பள்ளத்தாக்கு நோக்கி போக்குவரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, இன்று காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை 34 இடங்களில் ஸ்மார்ட் வழித்தடம் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

நெடுஞ்சாலை பயனர்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிடுவதுடன், போதிய ஓய்வுடன் பயணம் தொடங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், சமீபத்திய போக்குவரத்து தகவல்களை தொலைபேசி சேவை, அதிகாரப்பூர்வ இணையதள கண்காணிப்பு வழியாக அறிந்து கொள்ளலாம்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset