நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெடோங்கில் நிகழ்ந்த மர்மச் சம்பவம்: தாய், மகன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர்

சுங்கைப் பட்டானி: 

 பெடோங் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், நேற்று மாலை ஒரு தாயும் அவரது மகனும் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து மாலை 6.05 மணிக்கு பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்ததாக கோலா மூடா மாவட்ட காவல்துறைத் தலைவர், உதவி ஆணையர் ஹனியான் ராம்லான் கூறினார்.

வீட்டின் வரவேற்பறையிலும் சமையலறையிலும் 40 வயது மதிக்கத்தக்க ஆண், 70 வயது மதிக்கத்தக்க பெண் ஆகியோரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாகப் பரிசோதனையில் தெரியவந்ததாக அவர் கூறினார்.

"ஆரம்பகட்ட பரிசோதனையில் இறந்தவர்களின் உடல்களில் கூர்மையான ஆயுதங்களால் ஏற்பட்ட காயங்கள் எதுவும் இல்லை என்பது கண்டறியப்பட்டது.

"வீடு உள்ளிருந்து பூட்டப்பட்டிருந்ததால், காவல்துறையினர் அதை உடைத்து உள்ளே நுழைய வேண்டியிருந்தது.

"பிரேத பரிசோதனை அறிக்கை வரும் வரை இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது," என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் ர்.தெரிவித்தார்.

இருவரும் 48 மணி நேரத்திற்கும் மேலாக இறந்திருக்கலாம் என்று ஹனியான் கூறினார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset