செய்திகள் மலேசியா
உலக எண்ணெய் விலை ஏற்றம்; அரசின் செலவுத்திட்டத்தில் அழுத்தம் அதிகரிப்பு
ஷா ஆலம்:
உலக எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், ஏப்ரல், மே மாதங்களில் எரிபொருள் உதவி தொகை 10 பில்லியன் ரிங்கிட்டை மீறும் வாய்ப்பு உள்ளதாக பொருளாதார நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார். இது நாட்டின் நிதிநிலைக்கு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
புத்ரா வணிகப் பள்ளியின் பேராசிரியர் டாக்டர் அஹ்மட் ரஸ்மான் அப்துல் லத்தீஃப் தெரிவித்ததாவது, உலகளாவிய கச்சா எண்ணெய் விலை மே மாத இறுதி வரை ஒரு பீப்பாய் 120 அமெரிக்க டாலருக்கு மேல் நிலைத்திருந்தால், இந்த உயர்வு நிகழக்கூடும். இதனால் குறுகிய காலத்தில் அரசின் செலவுசுமை அதிகரிக்கும் என்றார்.
மலேசியா எண்ணெய் ஏற்றுமதி நாடாக இருப்பதால் கூடுதல் வருவாய் கிடைக்கும் வாய்ப்பு இருந்தாலும், அதிகரிக்கும் உதவி செலவுகள் அந்த நன்மையை குறைத்துவிடும். எனவே, முக்கிய துறைகளுக்கு முன்னுரிமை அளித்து அரசுச் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும் என அவர் பரிந்துரைத்தார்.
மேலும், உதவி தொகை வழங்கும் முறையை மறுசீரமைத்து, குறைந்த, நடுத்தர வருமானக் குழுக்களுக்கு இலக்கு வைத்து வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதன் மூலம் வீண்வழங்கல் குறைந்து, உண்மையில் தேவையுள்ளவர்களுக்கு உதவி சென்று சேரும் என கூறப்பட்டது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 24, 2026, 12:19 pm
பெங்கெராங்கில் 4-வது நாளாகத் தொடரும் தீப்பிழம்பு
March 24, 2026, 11:36 am
சீன மயானத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக 2 பேர் கைது: போலிஸ்
March 24, 2026, 11:35 am
வீட்டில் 48 மணி நேரத்திற்கும் மேலாக இறந்து கிடந்த இருவரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன: போலிஸ்
March 24, 2026, 11:34 am
ரமலான் மாதம் முழுவதும் உணவு விநியோகம் சீராக உள்ளது: போம்கா
March 24, 2026, 11:33 am
கண் இமைக்கும் நேரத்தில் சாம்பலான கனவு இல்லம்: ஈகைத் திருநாளில் வீடிழந்த குடும்பம்
March 24, 2026, 11:32 am
உணவகங்களில் புகைப்பிடித்த சுகாதார அமைச்சின் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்
March 24, 2026, 11:32 am
கோத்தா கினபாலு விமான நிலையத்தில் 1,500 பயணிகளுக்கு சிறப்பு வரவேற்பு
March 24, 2026, 10:54 am
மலேசியாவே பாதுகாப்பானது: போர் பதற்றத்திற்கு நடுவே மலேசியாவைத் தேர்ந்தெடுக்கும் வெளிநாட்டுப் பயணிகள்
March 24, 2026, 10:51 am
