செய்திகள் மலேசியா
ரமலான் மாதம் முழுவதும் உணவு விநியோகம் சீராக உள்ளது: போம்கா
கோலாலம்பூர்:
நிறுவனங்களுக்கு இடையேயான சிறந்த ஒருங்கிணைப்பு, தீவிரமான கண்காணிப்பு காரணமாக, கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு ரமலான் மாதம் முழுவதும் உணவு விநியோகம் சீராக இருந்தது.
மலேசிய பயனீட்டளர் சங்கங்களின் கூட்டமைப்பின் (போம்கா) தலைமை நிர்வாக அதிகாரி டி. சரவணன் இதனை கூறினார்.
கடந்த ஆண்டுகளில் கோழிக்கறி, முட்டை போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்குக் கடுமையான தட்டுப்பாடு நிலவியது.
இந்த ஆண்டு, அரிசி, முட்டை, வெங்காயம், கோழிக்கறி ஆகியவை பரவலான தட்டுப்பாடு ஏதுமின்றி பொதுவாகக் கிடைத்தன.
இருப்பினும், மலேசியா இன்னும் பல முக்கிய உணவுப் பொருட்களுக்கு இறக்குமதியைச் சார்ந்து இருப்பதால், நிலைமை நிலையற்றதாகவே உள்ளது.
புவிசார் அரசியல் பதட்டங்கள், உலகளாவிய விநியோகச் சங்கிலி இடையூறுகள், காலநிலை தொடர்பான பாதிப்புகள் போன்ற வெளிப்புற அழுத்தங்கள், உள்நாட்டு ஸ்திரத்தன்மையை விரைவாகச் சீர்குலைக்கக்கூடிய அபாயங்களை ஏற்படுத்துகின்றன.
விலைக் கட்டுப்பாடுகள் மற்றும் கண்காணிப்பு முயற்சிகள் போன்ற அரசாங்கத்தின் தலையீடுகள், முக்கிய அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை நிலைப்படுத்த உதவியுள்ளன.
இருப்பினும் வாங்கும் திறன் ஒரு கவலையாகவே உள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது விலை ஏற்ற இறக்கம் குறைந்திருந்தாலும், அடிப்படைச் செலவுகள் அதிகமாகவே உள்ளன என்றும் அவர் மேலும் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 24, 2026, 12:19 pm
பெங்கெராங்கில் 4-வது நாளாகத் தொடரும் தீப்பிழம்பு
March 24, 2026, 11:36 am
சீன மயானத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக 2 பேர் கைது: போலிஸ்
March 24, 2026, 11:35 am
வீட்டில் 48 மணி நேரத்திற்கும் மேலாக இறந்து கிடந்த இருவரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன: போலிஸ்
March 24, 2026, 11:33 am
கண் இமைக்கும் நேரத்தில் சாம்பலான கனவு இல்லம்: ஈகைத் திருநாளில் வீடிழந்த குடும்பம்
March 24, 2026, 11:32 am
உணவகங்களில் புகைப்பிடித்த சுகாதார அமைச்சின் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்
March 24, 2026, 11:32 am
கோத்தா கினபாலு விமான நிலையத்தில் 1,500 பயணிகளுக்கு சிறப்பு வரவேற்பு
March 24, 2026, 10:54 am
மலேசியாவே பாதுகாப்பானது: போர் பதற்றத்திற்கு நடுவே மலேசியாவைத் தேர்ந்தெடுக்கும் வெளிநாட்டுப் பயணிகள்
March 24, 2026, 10:51 am
பெடோங்கில் நிகழ்ந்த மர்மச் சம்பவம்: தாய், மகன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர்
March 24, 2026, 10:44 am
