நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கண் இமைக்கும் நேரத்தில் சாம்பலான கனவு இல்லம்: ஈகைத் திருநாளில் வீடிழந்த குடும்பம்

சிக்:

சிக்ப் பகுதியில் உள்ள கம்போங் தஞ்சோங்கில், ஈகைத் திருநாளின் மூன்றாவது நாளில் நேரிட்ட தீ விபத்தில் ஒரு குடும்பம் தனது உடைமைகள் அனைத்தையும் இழந்து ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு சுமார் 12:05 மணியளவில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்தது.

தீயணைப்பு, மீட்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தவுடன், சிக் நிலையத்திலிருந்து எட்டு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் அங்கு சென்றபோது, ஒரு மாடி வீடு சுமார் 80 விழுக்காடு தீயில் எரிந்து சேதமடைந்திருப்பது கண்டறியப்பட்டது.

விபத்து நிகழ்ந்த சமயத்தில் வீட்டில் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. தீயணைப்பு வீரர்களுடன் ஜெனியாங், பாடாங் லெம்பு ஆகிய பகுதிகளின் தன்னார்வத் தீயணைப்புப் படையினரும் இணைந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

நள்ளிரவு 12:44 மணியளவில் தீ முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டது. மீண்டும் தீப்பரவல் ஏற்படாமல் இருக்க தணிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த விபத்திற்கான காரணம், இழப்பு மதிப்பு குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset