செய்திகள் மலேசியா
சீன மயானத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக 2 பேர் கைது: போலிஸ்
ஆயர் ஈத்தாம்:
சீன மயானத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக 2 பேரை போலிசார் கைது செய்தனர்.
பினாங்கு வடகிழக்கு போலிஸ் தலைவர் அப்துல் ரசாக் முஹம்மது இதனை தெரிவித்தார்.
பினாங்கு, ஆயர் ஈத்தாமில் உள்ள ஒரு சீன மயான கல்லறையில் அநாகரிகமாக நடந்து கொண்டனர்.
இந்த குற்றச்சாட்டின் பேரில், ஒரு ஆணும் ஒரு பெண்ணும் போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, பத்து கந்துங்கில் உள்ள சீனக் கல்லறையில் நடந்த சம்பவம் குறித்து நேற்று தமக்கு ஒரு புகார் வந்ததது.
இதைத் தொடர்ந்து, ஜார்ஜ்டவுனில் உள்ள ஜாலான் பாடாங் தேம்பாக் அருகே ஒரு குடியிருப்பில் 37 வயதுப் பெண் ஒருவரும், சுங்கை ஆராவில் உள்ள ஜாலான் பாயா தெருபோங்கில் 58 வயது ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
சந்தேக நபர்கள் இருவரும் இந்த வழக்கில் தங்களுக்குத் தொடர்பு இருப்பதை ஒப்புக்கொண்டனர்.
மேலும் அவர்கள் மேலதிக விசாரணைக்காகக் காவலில் வைக்கப்படுவார்கள் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த வழக்கு, அநாகரிகமான நடத்தை, ஒருவரின் மானத்திற்கு அவமதிப்பு ஏற்படுத்துதல், இணைய வசதிகளைத் தவறாகப் பயன்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக விசாரிக்கப்பட்டு வருகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 24, 2026, 12:19 pm
பெங்கெராங்கில் 4-வது நாளாகத் தொடரும் தீப்பிழம்பு
March 24, 2026, 11:35 am
வீட்டில் 48 மணி நேரத்திற்கும் மேலாக இறந்து கிடந்த இருவரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன: போலிஸ்
March 24, 2026, 11:34 am
ரமலான் மாதம் முழுவதும் உணவு விநியோகம் சீராக உள்ளது: போம்கா
March 24, 2026, 11:33 am
கண் இமைக்கும் நேரத்தில் சாம்பலான கனவு இல்லம்: ஈகைத் திருநாளில் வீடிழந்த குடும்பம்
March 24, 2026, 11:32 am
உணவகங்களில் புகைப்பிடித்த சுகாதார அமைச்சின் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்
March 24, 2026, 11:32 am
கோத்தா கினபாலு விமான நிலையத்தில் 1,500 பயணிகளுக்கு சிறப்பு வரவேற்பு
March 24, 2026, 10:54 am
மலேசியாவே பாதுகாப்பானது: போர் பதற்றத்திற்கு நடுவே மலேசியாவைத் தேர்ந்தெடுக்கும் வெளிநாட்டுப் பயணிகள்
March 24, 2026, 10:51 am
பெடோங்கில் நிகழ்ந்த மர்மச் சம்பவம்: தாய், மகன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர்
March 24, 2026, 10:44 am
