நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உணவகங்களில் புகைப்பிடித்த சுகாதார அமைச்சின் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்

புத்ராஜெயா:

உணவகங்களில் புகைப்பிடித்த சுகாதார அமைச்சின் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த மார்ச் 23 அன்று ரவாங்கில் உள்ள ஒரு உணவுக் கடையில் அரசு ஊழியர் ஒருவர் புகைபிடித்துக் கொண்டிருந்தார்.

அந்தச் சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மலேசிய சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
உடனடி விசாரணையில், சம்பந்தப்பட்ட நபர் கோம்பாக் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு அதிகாரி என்பது கண்டறியப்பட்டது.

விதி மீறலைத் தொடர்ந்து, சட்டம் 852-இன் பிரிவு 16(2)-இன் கீழ் அபராத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொது சுகாதாரத்திற்கான புகைப்பிடிக்கும் பொருட்களின் கட்டுப்பாட்டுச் சட்டம் 2024 [சட்டம் 852]-இன் கீழ் உள்ள புகைப்பிடித்தல் தடை, அரசு ஊழியர்கள் உட்பட விதிவிலக்கு இல்லாமல் அனைத்து நபர்களுக்கும் பொருந்தும் என்று சுகாதார அமைச்சு வலியுறுத்தியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset