நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெங்கெராங்கில் 4-வது நாளாகத் தொடரும் தீப்பிழம்பு

பெங்கெராங்: 

இங்குள்ள புங்காய் பைபாஸ் எக்ஸ்பிரஸ்வேயில் செபானா கோவ் வரை பரவியுள்ள காட்டுத் தீ, நான்காவது நாளாகத் தொடர்கிறது.

புங்காய் தீயணைப்பு, மீட்பு நிலையத்தின் செயல்பாட்டுத் தளபதியான, மூத்த தீயணைப்பு அதிகாரி I (SFO I) ஆல்வின்னி ஜாக்சன், சனிக்கிழமை தொடங்கிய இந்தத் தீ, 150 ஹெக்டேர் பரப்பளவை உள்ளடக்கியுள்ளது என்றும், இதில் 63 ஹெக்டேர் அல்லது 42 சதவீதம் இதுவரை வெற்றிகரமாக அணைக்கப்பட்டுள்ளன என்றும் கூறினார்.

வெப்பமான, வறண்ட வானில , வலுவான காற்று ஆகியவை நிலைமையை மேலும் மோசமாக்கியதாக அவர் விளக்கினார்.

"தீயணைப்பு நடவடிக்கை புங்காய் தீயணைப்பு, மீட்பு நிலையத்தின் ஒரு குழு, அரச மலேசிய காவல் படை (PDRM), ஜோகூர் தோட்டங்கள் அறக்கட்டளை ஆகியோருடன் இணைந்து, இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

"பிரிவு A, நெடுஞ்சாலையின் இடதுபுறத்தில், 800 அடி குழாய், அருகிலுள்ள நீர்த்தேக்கத்திலிருந்து நீரைப் பயன்படுத்தி ஒரு கோடிவா GP10/10 பம்ப் மூலம் செயல்படுகிறது.

"பிரிவு B, நெடுஞ்சாலையின் வலதுபுறத்தில், 1,200 அடி குழாய், கோடிவா, தோஹட்சு பம்புகளைப் பயன்படுத்துகிறது, இதுவும் அருகிலுள்ள நீர்த்தேக்கத்திலிருந்து அதன் நீர் வழங்கலைப் பெறுகிறது," என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.

வாகனங்கள் தீ விபத்து பகுதிக்குள் நுழைவதைத் தடுக்கவும், பொதுப் பாதுகாப்பை உறுதி செய்யவும் பாயு டாமாய் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்களும் சாலையை மூட உதவியதாக அவர் தெரிவித்தார்.

"தீ முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை தீயணைப்புப் பணிகள் தொடரும் என்றும்  மேலும் பொதுமக்கள் அபாயகரமான பகுதியைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்," என்றும் அவர் மேலும் கூறினார்.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset