செய்திகள் மலேசியா
மலேசியாவே பாதுகாப்பானது: போர் பதற்றத்திற்கு நடுவே மலேசியாவைத் தேர்ந்தெடுக்கும் வெளிநாட்டுப் பயணிகள்
கோலாலம்பூர்:
அமெரிக்க-இஸ்ரேல்-ஈரான் மோதல் விமான சேவைகளைத் தடை செய்வதாலும், அமெரிக்க, ஜெர்மனி, துருக்கி, ஆஸ்திரேலியாவிலிருந்து வரும் பயணிகளைத் தங்கள் பயணங்களைத் திருப்பிவிட கட்டாயப்படுத்துவதாலும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மலேசியாவில் தங்குவதை நீட்டித்துள்ளனர்.
"நான் வியாழக்கிழமை தாய்லாந்தின் பெங்காக்கிலிருந்து வந்தேன். தற்போதைக்கு அமெரிக்காவிற்குத் திரும்பத் திட்டமிடவில்லை," என்று கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சஸைச் சேர்ந்த, ஓய்வு பெற்ற அமெரிக்க கடற்படை வீரரான 58 வயதான கெவின் ஜான்சன் என்பவர் நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பத்திரிக்கையிடம் கூறினார்.
மேலும், 29 வயதான ஜெர்மன் சுற்றுலாப் பயணி கோலின் வாக்னர் எனும் மாணவர், இப்போது வீட்டிற்குத் திரும்புவது செலவு மிக்கது என்றும் அதனால் தான் இன்னும் பல மாதங்கள் இங்கே தங்கவிருப்பதாகவும் தெரிவித்தார்.
"கத்தார் வழியாகச் செல்லும் விமானப் பாதைகள் மூடப்பட்டதால், என் நண்பர் சிங்கப்பூரிலிருந்து சீனா வழியாக ஜெர்மனிக்குப் பறந்தார். ஒரு வழிப் பயணச் சீட்டுக்கு €860 செலவானது, அதுவே மலிவான தேர்வாகும். இதற்கு முன்பு, கத்தார் வழியாகச் செல்ல சுமார் €400 மட்டுமே செலவானது."
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தைச் சேர்ந்த 76 வயதான வில்லியம் கிரீன்வுட், இரண்டு வாரங்களுக்கு முன்பு மலேசியாவிலிருந்து ஓமானுக்கு ஒரு வணிகப் பயணம் திட்டமிட்டிருந்தார், ஆனால் அவரது பயணம் பலமுறை ரத்து செய்யப்பட்டது.
"நான் பயணத்தை மாற்றியமைக்க ஒரு வாய்ப்பைப் பெற்றேன், ஆனால் நான் எப்போது பயணிக்க முடியும் என்று எனக்குத் தெரியாது, எனவே நான் ஏர்ஏஷியாவிலிருந்து பணத்தைத் திரும்பப் பெறக் கேட்டேன்.
"மலேசியா ஒரு சிறந்த நாடாகும். இங்கு மக்கள் அன்பானவர்களாக இருக்கிறார்கள். மேலும் எனக்கு இங்கு எந்த சிரமமும் இல்லை," என்றார் அவர்.
தி நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், பெட்ரோநாஸ் இரட்டை கோபுரங்களிலும் சுற்றுலாப் பயணிகளைச் சந்தித்தது.
துருக்கியைச் சேர்ந்த 31 வயதான செர்ஹத் அய்டோகமுஸ், மார்ச் 17 அன்று மலேசியாவிற்கு வந்தடைந்தார்.
"நான் ஜப்பானுக்குச் செல்ல விரும்பினேன். மலேசியா அல்லது துருக்கியிலிருந்து நேரடியாகப் பறப்பதை விட, தென் கொரியாவிலிருந்து துருக்கிக்குத் திரும்பப் பறப்பது மலிவானது.
"நான் துருக்கிய எல்லைக்கு அருகே ஏவுகணை நடவடிக்கைகள்,பாதுகாப்பு அமைப்புகள் பற்றிப் படித்தேன். எனக்குப் போர் பற்றிச் சொல்லப்பட்டது, ஆனால் நான் எப்படியோ பறந்துவிட்டேன், என் விமானம் ரத்து செய்யப்படாதது எனக்கு நிம்மதியளித்தது," என்று அவர் கூறினார்.
பின்லாந்தைச் சேர்ந்த 58 வயதான ஆன் மாரா, மேற்கு ஆசியாவில் மோதல் தொடங்குவதற்கு முன்பே தனது டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருந்தார்.
"உக்ரைன் எல்லையோரத்தில் நிலவும் நிலைமை விமானப் பாதைகளைப் பாதித்தது. எனது சேருமிடத்தை அடைய நான் ஒரு நீண்ட வழியை எடுக்க வேண்டியிருந்தது," என்று அந்த ஓய்வுபெற்றவர் கூறினார்.
"நான் எகிப்தில் இரண்டு ஆண்டுகள் தங்கியிருந்தேன். கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்திற்கு நேரடியாகப் பயணிக்க டிக்கெட் கட்டணம் RM3,290 ஆனதால் எகிப்து, ஜெட்டா வழியாகக் கோலாலம்பூர் வந்தடைந்தேன்," என்று பாலஸ்தீனத்தின் காசாவிலிருந்து வந்த 50 வயதான ஷைமா சாடிக் தெரிவித்தார்.
மத்திய கிழக்கு மோதல் தொடரும் நிலையில், நாட்டைச் சுற்றிப் பார்க்கத் தொடர்வதற்குப் பாதுகாப்பு, அணுகல்தன்மை, உள்ளூர் விருந்தோம்பல் ஆகியவற்றைக் காரணங்களாக அந்தச் சுற்றுலாப் பயணிகள் குறிப்பிட்டனர்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 24, 2026, 12:19 pm
பெங்கெராங்கில் 4-வது நாளாகத் தொடரும் தீப்பிழம்பு
March 24, 2026, 11:36 am
சீன மயானத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக 2 பேர் கைது: போலிஸ்
March 24, 2026, 11:35 am
வீட்டில் 48 மணி நேரத்திற்கும் மேலாக இறந்து கிடந்த இருவரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன: போலிஸ்
March 24, 2026, 11:34 am
ரமலான் மாதம் முழுவதும் உணவு விநியோகம் சீராக உள்ளது: போம்கா
March 24, 2026, 11:33 am
கண் இமைக்கும் நேரத்தில் சாம்பலான கனவு இல்லம்: ஈகைத் திருநாளில் வீடிழந்த குடும்பம்
March 24, 2026, 11:32 am
உணவகங்களில் புகைப்பிடித்த சுகாதார அமைச்சின் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்
March 24, 2026, 11:32 am
கோத்தா கினபாலு விமான நிலையத்தில் 1,500 பயணிகளுக்கு சிறப்பு வரவேற்பு
March 24, 2026, 10:51 am
பெடோங்கில் நிகழ்ந்த மர்மச் சம்பவம்: தாய், மகன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர்
March 24, 2026, 10:44 am
