செய்திகள் மலேசியா
கோத்தா கினபாலு விமான நிலையத்தில் 1,500 பயணிகளுக்கு சிறப்பு வரவேற்பு
கோத்தா கினபாலு:
மலேசிய சுற்றுலா நிறுவனம், 2026 சுற்றுலா ஆண்டை முன்னிட்டு, கோத்தா கினபாலு சர்வதேச விமான நிலையம் வழியாக வந்த 1,500 உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகளை ஹறிராயா கொண்டாட்டத்துடன் சிறப்பாக வரவேற்றது.
சபா மாநில சுற்றுலா, கலை, கலாச்சார அமைச்சக அலுவலக இயக்குநர் சோங் வாய் கிட் தெரிவித்ததாவது, வருகை மண்டபத்தில் பயணிகளுக்கு பாரம்பரிய திருவிழா உணவுகள் வழங்கப்பட்டதுடன், நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
மேலும், மலாய் கலாச்சார நிகழ்ச்சிகள், திருவிழா தோற்றமளிக்கும் பொம்மைகள், கெட்டுபட் தயாரிப்பு போன்ற பாரம்பரிய நிகழ்ச்சியை வழங்கி மேலும் சிறப்பித்தன.
இந்த நிகழ்ச்சி மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது. சிங்கப்பூர், சியோல், கோலாலம்பூர், கூச்சிங், தவாவ், சண்டாகன் ஆகிய இடங்களில் இருந்து வந்த பயணிகள் இதில் கலந்து கொண்டனர்.
இதேபோன்ற நிகழ்ச்சிகள் நாட்டின் எட்டு முக்கிய விமான நிலையங்களில் நடத்தப்பட்டதாகவும், பல்வேறு அமைப்புகள், விமான நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கை, பயணிகளுக்கு நினைவூட்டும் வரவேற்பு அனுபவத்தை வழங்குவதுடன், மலேசியாவை பாதுகாப்பான, பண்பாட்டு செழுமை கொண்ட சுற்றுலா தலமாக உலகிற்கு அறிமுகப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டதாகும்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 24, 2026, 12:19 pm
பெங்கெராங்கில் 4-வது நாளாகத் தொடரும் தீப்பிழம்பு
March 24, 2026, 11:36 am
சீன மயானத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக 2 பேர் கைது: போலிஸ்
March 24, 2026, 11:35 am
வீட்டில் 48 மணி நேரத்திற்கும் மேலாக இறந்து கிடந்த இருவரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன: போலிஸ்
March 24, 2026, 11:34 am
ரமலான் மாதம் முழுவதும் உணவு விநியோகம் சீராக உள்ளது: போம்கா
March 24, 2026, 11:33 am
கண் இமைக்கும் நேரத்தில் சாம்பலான கனவு இல்லம்: ஈகைத் திருநாளில் வீடிழந்த குடும்பம்
March 24, 2026, 11:32 am
உணவகங்களில் புகைப்பிடித்த சுகாதார அமைச்சின் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்
March 24, 2026, 10:54 am
மலேசியாவே பாதுகாப்பானது: போர் பதற்றத்திற்கு நடுவே மலேசியாவைத் தேர்ந்தெடுக்கும் வெளிநாட்டுப் பயணிகள்
March 24, 2026, 10:51 am
பெடோங்கில் நிகழ்ந்த மர்மச் சம்பவம்: தாய், மகன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர்
March 24, 2026, 10:44 am
