செய்திகள் மலேசியா
வாகனத்துக்குள் பாய்ந்த பட்டாசு: 18 மாத குழந்தை நூலிழையில் உயிர் தப்பியது
கோலா நேருஸ்:
வாகனத்தில் பயணம் செய்துக் கொண்டிருந்த குடும்பம் ஒன்று பட்டாசு சம்பவத்தில் உயிர் தப்பிய அதிர்ச்சி நிகழ்வு இடம்பெற்றுள்ளது. 38 வயதான ரஷிதி இஷாக் கூறுகையில், வாகனத்துக்குள் பாய்ந்த பட்டாசு முதலில் தனது கையில் பட்டதால் பெரிய ஆபத்து தவிர்க்கப்பட்டதாக தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை நோன்பு திறந்து தொழுகை முடித்த பின்னர் இரவு 9 மணியளவில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, வாகன ஜன்னலை திறந்திருந்த நிலையில் பட்டாசு துகள்கள் திடீரென உள்ளே புகுந்தன. அது அவரது இடது கையில் பட்டதுடன் பின்னர் கண்ணாடி மீது மோதித் வெடித்து முன் கண்ணாடி சேதமடைந்தது.
அந்த நேரத்தில், 18 மாத குழந்தை மனைவியின் மடியில் இருந்ததாகவும், பட்டாசு கையில் படாமல் இருந்தால் நேரடியாக குழந்தையின் முகத்தைத் தாக்கியிருக்கும் எனவும் அவர் கூறினார். மேலும், வாகனத்தின் பின்பக்கத்தில் இருந்த 4, 8, 9 வயதுடைய மூன்று குழந்தைகளும் பாதுகாப்பாக இருந்தனர்.
இந்த சம்பவத்தில் அவரது கையில் லேசான காயம் ஏற்பட்டது. சாலையோரங்களில் பட்டாசு வெடிப்பது மிகவும் ஆபத்தானது என்றும், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் மட்டுமே பட்டாசு பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் எச்சரித்தார்.
அவர் காவல்துறையில் புகார் அளிக்கவில்லை என்றாலும், மற்றவர்களின் உயிரை ஆபத்தில் ஆழ்த்தாத வகையில் அனைவரும் பொறுப்புடன் நடக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 24, 2026, 12:19 pm
பெங்கெராங்கில் 4-வது நாளாகத் தொடரும் தீப்பிழம்பு
March 24, 2026, 11:36 am
சீன மயானத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக 2 பேர் கைது: போலிஸ்
March 24, 2026, 11:35 am
வீட்டில் 48 மணி நேரத்திற்கும் மேலாக இறந்து கிடந்த இருவரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன: போலிஸ்
March 24, 2026, 11:34 am
ரமலான் மாதம் முழுவதும் உணவு விநியோகம் சீராக உள்ளது: போம்கா
March 24, 2026, 11:33 am
கண் இமைக்கும் நேரத்தில் சாம்பலான கனவு இல்லம்: ஈகைத் திருநாளில் வீடிழந்த குடும்பம்
March 24, 2026, 11:32 am
உணவகங்களில் புகைப்பிடித்த சுகாதார அமைச்சின் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்
March 24, 2026, 11:32 am
கோத்தா கினபாலு விமான நிலையத்தில் 1,500 பயணிகளுக்கு சிறப்பு வரவேற்பு
March 24, 2026, 10:54 am
மலேசியாவே பாதுகாப்பானது: போர் பதற்றத்திற்கு நடுவே மலேசியாவைத் தேர்ந்தெடுக்கும் வெளிநாட்டுப் பயணிகள்
March 24, 2026, 10:51 am
பெடோங்கில் நிகழ்ந்த மர்மச் சம்பவம்: தாய், மகன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர்
March 24, 2026, 10:44 am
