செய்திகள் மலேசியா
ஹரிராயா சிறப்பு சோதனை: 1.7 இலட்சம் வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது
ஈப்போ:
ஹரிராயா 2026 சிறப்பு நடவடிக்கையின் போது, நாடு முழுவதும் 172,479 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டதாக சாலைப் போக்குவரத்து துறை தலைமை இயக்குநர் டத்தோ ஏடி ஃபட்லி ரம்லி தெரிவித்தார். இதில் 14,455 வாகனங்களுக்கு பல்வேறு குற்றங்களுக்காக நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், 1,651 தொழில்நுட்ப பரிசோதனை சீட்டுகள் வழங்கப்பட்டதுடன், 289 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்டவற்றில் 43 சரக்கு வாகனங்கள் பயணத் தடை விதிமுறையை மீறியதாக கண்டறியப்பட்டது. இதே காலத்தில், சாலைப் போக்குவரத்து சட்டம் 1987 கீழ் மொத்தம் 33,402 நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன.
சீட் பெல்ட் அணியாதது (761), அதிக எடை ஏற்றுதல் (353), சிவப்பு விளக்கை மீறுதல் (317) இதில் முக்கியமாக பதிவு செய்யப்பட்ட விதிமீறல்களாகும். இதனுடன் அவசர வழித்தடத்தில் ஓட்டுதல், வாகனம் ஓட்டும்போது கைப்பேசி பயன்படுத்துதல், இரட்டை கோடு மீறி முந்திச் செல்லுதல் போன்ற பல குற்றங்களும் கண்டறியப்பட்டன.
இந்த நடவடிக்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆறு உயர் தொழில்நுட்ப ட்ரோன்கள் கண்காணிப்பை மேலும் வலுப்படுத்தியதாக அவர் கூறினார். ட்ரோன்கள் மூலம் குற்றங்களை எளிதில் கண்டறிய முடிந்தாலும், நேரடியாக அபராதம் விதிக்க முடியாது.
மேலும், இந்த நடவடிக்கையின் போது எந்த பேருந்து ஓட்டுநரும் போதைப்பொருள் பயன்பாட்டில் சிக்கவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 24, 2026, 12:19 pm
பெங்கெராங்கில் 4-வது நாளாகத் தொடரும் தீப்பிழம்பு
March 24, 2026, 11:36 am
சீன மயானத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக 2 பேர் கைது: போலிஸ்
March 24, 2026, 11:35 am
வீட்டில் 48 மணி நேரத்திற்கும் மேலாக இறந்து கிடந்த இருவரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன: போலிஸ்
March 24, 2026, 11:34 am
ரமலான் மாதம் முழுவதும் உணவு விநியோகம் சீராக உள்ளது: போம்கா
March 24, 2026, 11:33 am
கண் இமைக்கும் நேரத்தில் சாம்பலான கனவு இல்லம்: ஈகைத் திருநாளில் வீடிழந்த குடும்பம்
March 24, 2026, 11:32 am
உணவகங்களில் புகைப்பிடித்த சுகாதார அமைச்சின் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்
March 24, 2026, 11:32 am
கோத்தா கினபாலு விமான நிலையத்தில் 1,500 பயணிகளுக்கு சிறப்பு வரவேற்பு
March 24, 2026, 10:54 am
மலேசியாவே பாதுகாப்பானது: போர் பதற்றத்திற்கு நடுவே மலேசியாவைத் தேர்ந்தெடுக்கும் வெளிநாட்டுப் பயணிகள்
March 24, 2026, 10:51 am
பெடோங்கில் நிகழ்ந்த மர்மச் சம்பவம்: தாய், மகன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர்
March 24, 2026, 10:44 am
