செய்திகள் மலேசியா
வெப்பமான காலநிலையில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: பகாங் சுல்தான்
குவாந்தான்:
தற்போதைய வெப்பமான, வறண்ட வானிலை காரணமாக, மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும்.
திறந்தவெளியில் தீ மூட்டுவதில் ஈடுபடக்கூடாது என்றும் பகாங் மாநில சுல்தான், அல்- அப்துல்லாஹ் ரியாதுத்தீன் இதனை கேட்டுக் கொண்டார்.
இன்று பகாங் அரண்மனை முகநூல் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட ஒரு பதிவில்,
வெப்பநிலை அதிகரிப்பு, வறண்ட சூழலில் தீ விபத்து ஏற்படும் அபாயம் காரணமாக தற்போதைய வானிலை நிலவரங்களுக்கு தீவிர கவனம் தேவை.
பொதுமக்கள் எப்போதும் போதுமான அளவு தண்ணீர் அருந்துவதை உறுதி செய்ய வேண்டும்.
பிற்பகலில் வெளிப்புறச் செயல்பாடுகளைக் குறைக்க வேண்டும்.
குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள், உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் போன்ற ஆபத்தில் உள்ள குழுவினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அவர் கூறினார்.
கட்டுப்பாடற்ற தீயை உண்டாக்கி, காற்றின் தரத்தைப் பாதிக்கக்கூடிய குப்பை, காய்ந்த இலைகள் அல்லது தோட்டக் கழிவுகளை எரிப்பது உள்ளிட்ட திறந்தவெளி எரிப்புச் செயல்களில் பொதுமக்கள் ஈடுபட வேண்டாம் என அல்-சுல்தான் அப்துல்லா உத்தரவிட்டுள்ளார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 24, 2026, 11:36 am
சீன மயானத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக 2 பேர் கைது: போலிஸ்
March 24, 2026, 11:35 am
வீட்டில் 48 மணி நேரத்திற்கும் மேலாக இறந்து கிடந்த இருவரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன: போலிஸ்
March 24, 2026, 11:34 am
ரமலான் மாதம் முழுவதும் உணவு விநியோகம் சீராக உள்ளது: போம்கா
March 24, 2026, 11:33 am
கண் இமைக்கும் நேரத்தில் சாம்பலான கனவு இல்லம்: ஈகைத் திருநாளில் வீடிழந்த குடும்பம்
March 24, 2026, 11:32 am
உணவகங்களில் புகைப்பிடித்த சுகாதார அமைச்சின் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்
March 24, 2026, 11:32 am
கோத்தா கினபாலு விமான நிலையத்தில் 1,500 பயணிகளுக்கு சிறப்பு வரவேற்பு
March 24, 2026, 10:54 am
மலேசியாவே பாதுகாப்பானது: போர் பதற்றத்திற்கு நடுவே மலேசியாவைத் தேர்ந்தெடுக்கும் வெளிநாட்டுப் பயணிகள்
March 24, 2026, 10:51 am
பெடோங்கில் நிகழ்ந்த மர்மச் சம்பவம்: தாய், மகன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர்
March 24, 2026, 10:44 am
உலக எண்ணெய் விலை ஏற்றம்; அரசின் செலவுத்திட்டத்தில் அழுத்தம் அதிகரிப்பு
March 24, 2026, 10:30 am
