நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பூடி 95-ஐ தவறாகப் பயன்படுத்துபவர்களின் அடையாள அட்டையை முடக்கி, மானியத் தகுதி ரத்து செய்யப்படும்: நிதியமைச்சு

புத்ராஜெயா:

பூடி 95-ஐ தவறாகப் பயன்படுத்துபவர்களின்
அடையாள அட்டையை முடக்கி, மானியத் தகுதி ரத்து செய்யப்படும்

நிதியமைச்சு ஓர் அறிக்கையில் இதனை தெரிவித்தது.

எரிபொருள் மானிய முறைகேடு பரிவர்த்தனைகளில் பயன்படுத்தப்படும் அடையாள அட்டைகள் முடக்கப்படும்.

மேலும் சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்களை பூடி 95 திட்டத்தின் பலன்களைத் தொடர்ந்து பெறுவதிலிருந்தும் தகுதி நீக்கம் செய்வதன் மூலம் அமைச்சு கடுமையான நடவடிக்கை எடுக்கும்.

ஒரு பெட்ரோல் நிலையத்தில், ஒருவர் காலி கொள்கலனில் ரோன் 95 பெட்ரோலை நிரப்புவதைக் காட்டும் காணொலி சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட நபர் ஒரு மலேசியர். அடையாள அட்டை வைத்திருப்பவர் என விசாரணையில் கண்டறியப்பட்டது.

பூடி 95 திட்டத்தின்கீழ் வழங்கப்படும் எரிபொருள் மானியங்களைத் தவறாகப் பயன்படுத்தியதன் மூலம் இந்தச் செயல் விதிமுறைகளைத் தெளிவாக மீறியுள்ளது. 

மேலும், இது வெளிப்படையான, இலக்கு சார்ந்த, திறமையான மானிய நிர்வாகத்தை உறுதி செய்வதில் அரசாங்கத்தின் முயற்சிகளைப் பாதிக்கக்கூடும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset