நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மஇகா மத்திய செயலவை என்ன முடிவெடுக்கும் என்று என்னால் சொல்ல முடியாது: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

பாங்கி:

மஇகா மத்திய செயலவை என்ன முடிவெடுக்கும் என்று என்னால் இப்போது சொல்ல முடியாது.

மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் இதனை கூறினார்.

மஇகாவின் எதிர்காலம் குறித்து மத்திய செயலவை முடிவெடுக்க வேண்டும் என கடந்த பொது பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதன் அடிப்படையில் கட்சியின் மத்திய செயலவை கூட்டம் வரும் மார்ச் 25ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதனால் இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என பரவலாக பேசப்பட்டு வருகிறது.

குறிப்பாக தேசியக் கூட்டணியில் மஇகா இணைத்துக் கொள்ளப்படும் என அதன் தலைமைச் செயலாளர் அண்மையில் அறிவித்திருந்தார்.

தேசியக் கூட்டணியில் சேர்வதற்கான ஆய்வு அறிக்கை மட்டுமே சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில் தான் தேசியக் கூட்டணியின் செயலாளர் இந்த அறிக்கையை வெளியிட்டு இருந்தார்.

இருந்தாலும் இந்த விவகாரத்தில் கட்சியின் தலைவரான நானோ அல்லது துணைத் தலைவரோ முடிவு எடுக்க முடியாது.

கட்சியை மத்தியச் செலவை தான் அதற்கான முடிவை எடுக்க வேண்டும்.

அதன் அடிப்படையில் இவ்வாரம் நடைபெறவிருக்கும் மத்திய செலவை மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து முழுமையாக ஆராய்ந்து விவாதித்து ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கப்படும்.

ஆனால் அந்த முடிவு என்னவென்று என்னால் இப்போது கூற முடியாது.

காரணம் மத்திய செயவை என்ன முடிவு எடுக்கும் என்று கூட்டம் நடைபெறும் போது தான் அனைவருக்கும் தெரியும்.

ஆக யூகங்களை ஏற்படுத்தாமல் அனைவரும் பொறுமையாக இருக்க வேண்டும்.

பாங்கி முச்சந்தி முனியாண்டி ஆலயத்தின் வருடாந்திர திருவிழாவில் கலந்து கொண்ட டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset