செய்திகள் மலேசியா
வியர்வை சிந்தி உழைத்தால் மட்டுமே விவசாயத்தில் வெற்றி பெற முடியும்: டத்தோ டி. மோகன்
கிள்ளான்:
வியர்வை சிந்தி உழைத்தால் மட்டுமே விவசாயத்தில் வெற்றி பெற முடிவும்.
சுக்கிம் தலைவர் டத்தோ டி. மோகன் இதனை வலியுறுத்தினார்.
கிள்ளான் பூலாவ் இண்டாவில் அமைந்துள்ள அக்ரோக்ஸ் விவசாய இடத்திற்கு வந்தேன்.
இங்கு வினேஷ் குமார் என்ற 25 வயது இளைஞர் மிளகாய் விவசாயத்தில் மிகவும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார்.
குறிப்பாக எடுத்துக் கொண்ட முயற்சியில் வெற்றி பெற வேண்டும் என அவர் தினசரி அயராது உழைத்து இன்று வெற்றி பெற்றுள்ளார்.
சில்லி குணா என்பவர் அவருக்கு அனைத்து விதமான வழிகாட்டல்களையும் வழங்கி வருகிறார்.
இந்த இளைஞரை பார்க்கும்போது மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது.
இதேபோன்று நமது இந்திய இளைஞர்கள் விவசாயத் துறையில் கால் பதித்து வெற்றி பெற வேண்டும்.
வெயிலில் வேர்வை சிந்தி உழைத்தால்தான் இதில் வெற்றி பெற முடியும்.
அப்படி முடியாதவர்கள் தயவுசெய்து விவசாயத்துறையில் இறங்க வேண்டாம்.
அதேவேளையில் நமது இளைஞர்கள் தெரியாத தொழிலில் கால் வைக்கக் கூடாது.
குறிப்பாக பெற்றோரின் உழைப்பில் வந்த பணத்தை வைத்து இது போன்ற முயற்சிகளில் இளைஞர்கள் இறங்க வேண்டாம்.
தானாகவே உழைத்து அதில் கிடைக்கும் பணத்தை வைத்து சொந்த தொழில் செய்து அதில் வெற்றி காண வேண்டும்.
அப்போதுதான் அந்த வெற்றியை முழுமையானதாக இருக்கும் என்று டத்தோ டி. மோகன் வலியுறுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 22, 2026, 1:20 pm
இணையதளம் முதலீட்டு மோசடி: RM3.5 லட்சம் ரிங்கிட்டை இழந்த 34 வயது ஆடவர்
March 22, 2026, 10:58 am
பினாங்கில் நிலவரி சர்ச்சை: அறிக்கை தயாரிக்கும் முதலமைச்சர் சௌ கோன் இயோவ்
March 22, 2026, 10:37 am
ஜார்ஜ்டவுனில் பட்டாசு விற்பனைக் கடை தீயில் சாம்பல்
March 22, 2026, 10:32 am
நோன்பு பெருநாள் போக்குவரத்து அதிகரித்ததால் சாலை விபத்துகளில் 26 பேர் மரணம்
March 22, 2026, 10:28 am
