நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆலயங்களையும் அவற்றின் பிரச்சனைகளையும் கண்டறிய பினாங்கு மாநிலத்திற்கு மஹிமா பயணம்: டத்தோ சிவகுமார்

சிம்பாங் அம்பாட்:

ஆலயங்களையும் அதன் பிரச்சனைகளையும் கண்டறிய பினாங்கு மாநிலத்திற்கு மஹிமா பயணத்தை மேற்கொண்டுள்ளது.

மஹிமாவின் தலைவர் டத்தோ ந. சிவக்குமார் இதனை கூறினார்.

ஆலயங்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் அதில் உள்ள சிக்கல்களை தீர்வு காண்பதற்கான முயற்சிகளை அடையாளம் காணும் நோக்கில் மஹிமா நாடு முழுவதும் பயணங்களை மேற்கொண்டு வருகிறது.

அதன் அடிப்படையில் இந்தப் பயணம் தற்போது பினாங்கு மாநிலத்தில் தொடர்கிறது.

இன்றைய தினம் நாங்கள் மாநிலத்தில் உள்ள ஆலய நிர்வாகங்களுடன் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்படும்.

இதற்கு முன்னதாக சிம்பாங் அம்பாட்டில் உள்ள  ஸ்ரீ மகா மீனாட்சி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் நான் கலந்து கொண்டேன்.

ஆலயத் தலைவர் கலைமணி அழைப்பின் பேரில் இந்த பூஜையில் நான் கலந்து கொண்டேன்.

சிறப்பு பூஜைகளுக்கு பின் ஆலய நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது.

இதில் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசப்பட்டது என்று டத்தோ சிவக்குமார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset