நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஈகைத் திருநாள் கண்காணிப்பு: கோலாலம்பூரின் முக்கிய பகுதிகளில் குடிவரவுத் துறையின் தீவிர ரோந்து பணி

கோலாலம்பூர்: 

ஈகைத் திருநாள் கொண்டாட்டங்களை முன்னிட்டு, தலைநகர் கோலாலம்பூரில் வெளிநாட்டவர் அதிகம் கூடும் முக்கிய இடங்களைக் குடிவரவுத் துறை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறது. 

பொதுமக்களின் பாதுகாப்பு, பொது அமைதியைப் பேணும் நோக்கில், மார்ச் 20 முதல் மார்ச் 29 வரை 'கண்காணிப்பு நடவடிக்கை' (Op Pemantauan) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கண்காணிப்பு நடவடிக்கையில் கே.எல்.சி.சி (KLCC), புக்கிட் பிந்தாங், பெட்டாலிங் ஸ்ட்ரீட், மஸ்ஜித் இந்தியா, சவ் கிட் போன்ற 10-க்கும் மேற்பட்ட முக்கிய இடங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. 

குடிவரவுத் துறையினரின் இருப்பைப் பொதுமக்கள் உணரும் வகையில், எச்சரிக்கை விளக்குகள் பொருத்தப்பட்ட வாகனங்கள் மூலம் ஜாலான் அம்பாங் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் அதிகாரிகள் தொடர் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்துக் கருத்துரைத்த குடிவரவுத் துறை தலைமை இயக்குநர் டத்தோ ஜகாரியா ஷாபான், இக்கண்காணிப்பு நடவடிக்கை வெளிநாட்டவர்களின் கொண்டாட்டங்களுக்கு இடையூறு விளைவிப்பதற்காக அல்ல என்று தெளிவுபடுத்தினார். 

மாறாக, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள், புலம்பெயர்ந்தோர் நாட்டின் குடிவரவுச் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடப்பதை உறுதி செய்யவும், எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி பொது ஒழுங்கைப் பாதுகாக்கவும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார்.

சுமார் 50 அதிகாரிகள் இரண்டு சுழற்சி முறைகளில் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையிலும், பின்னர் இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையிலும் என 12 மணி நேரச் சுழற்சி அடிப்படையில் இந்தத் தீவிரக் கண்காணிப்புப் பணி தொய்வின்றி நடைபெற்று வருகிறது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset