செய்திகள் மலேசியா
பினாங்கில் நிலவரி சர்ச்சை: அறிக்கை தயாரிக்கும் முதலமைச்சர் சௌ கோன் இயோவ்
ஜார்ஜ்டவுன்:
பினாங்கு மாநிலத்தில் ஜனவரி 1 முதல் அமலுக்கு வந்த புதிய நிலவரி விகிதம் தொடர்பாக, முதலமைச்சர் சௌ கோன் இயோவ் விரிவான அறிக்கை ஒன்றைத் தயாரித்து கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோனி லோக்கிடம் சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தைப் பற்றி மூவர் கலந்து ஆலோசனை நடத்த ஏற்பாடு செய்ததற்காக லோக்குக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். முன்னதாக, தொடர்ச்சியாக நீடிக்கும் நிலவரி உயர்வு சர்ச்சையைத் தீர்க்க சௌ கோன், பினாங்கு மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் லிம் குவான் எங் இடையே சந்திப்பு ஏற்பாடு செய்யப்படும் என லோக் அறிவித்திருந்தார்.
நிலவரி விகித திருத்தம், கிராமப்புற நிலங்களை நகர்ப்புறமாக வகைப்படுத்தும் நடவடிக்கை, தேசிய நிலச் சட்டத்தின் பிரிவின் கீழ் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மாற்றம் பினாங்கு முழுவதும் சுமார் 3.7 இலட்சம் நில உரிமைகளை உள்ளடக்கி, வீட்டு, வணிக, தொழில், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளை பாதித்துள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ஊடகங்களில் கருத்து தெரிவிக்க வேண்டாம் என்ற கட்சி உத்தரவை மதிப்பதாக சௌ கோன் கூறினார். இதன் மூலம் கட்சி, அரசாங்கத்திற்கு எதிரான எதிர்மறை கருத்துக்கள் உருவாகாமல் தடுக்க முடியும் என அவர் விளக்கினார்.
பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள் மாவட்ட நில அலுவலகங்களில் முறையீடு செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
அதேவேளை, இந்த விவகாரம் தொடர்பாக நடைபெறவுள்ள மூவர் சந்திப்பு வரை எந்தவொரு பொது கருத்தையும் வெளியிடமாட்டேன் என லிம் குவான் எங் தெரிவித்துள்ளார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 22, 2026, 1:20 pm
இணையதளம் முதலீட்டு மோசடி: RM3.5 லட்சம் ரிங்கிட்டை இழந்த 34 வயது ஆடவர்
March 22, 2026, 12:57 pm
வியர்வை சிந்தி உழைத்தால் மட்டுமே விவசாயத்தில் வெற்றி பெற முடியும்: டத்தோ டி. மோகன்
March 22, 2026, 10:37 am
ஜார்ஜ்டவுனில் பட்டாசு விற்பனைக் கடை தீயில் சாம்பல்
March 22, 2026, 10:32 am
நோன்பு பெருநாள் போக்குவரத்து அதிகரித்ததால் சாலை விபத்துகளில் 26 பேர் மரணம்
March 22, 2026, 10:28 am
