செய்திகள் மலேசியா
ஜார்ஜ்டவுனில் பட்டாசு விற்பனைக் கடை தீயில் சாம்பல்
ஜார்ஜ்டவுன்:
ஜார்ஜ்டவுனில் உள்ள தாமன் பெக்காக்கா பகுதியில், பட்டாசு விற்பனை செய்யும் ஒரு சிறிய கடை நடு இரவில் ஏற்பட்ட தீ விபத்தில் பெரிதும் சேதமடைந்தது. இந்த சம்பவம் குறித்து இரவு 12.05 மணியளவில் தீயணைப்பு துறைக்கு அவசர அழைப்பு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து நிபோங் தெபால் தீயணைப்பு நிலையத்திலிருந்து எட்டு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். சுமார் 10×10 அடி அளவுள்ள அந்தக் கடை 95 சதவீதம் வரை எரிந்து சேதமடைந்ததாக கூறப்படுகிறது. அருகில் இருந்த யமஹா வகை மோட்டார் சைக்கிளும் 90 சதவீதம் சேதமடைந்தது.
மேலும், தீ பரவி அருகிலிருந்த வீட்டின் மூன்று குளிர்சாதன இயந்திரங்களும் பாதிக்கப்பட்டன. தீயை இரவு 12.25 மணியளவில் கட்டுப்படுத்தி, 12.44 மணிக்குள் முழுமையாக அணைத்தனர். பின்னர் இறுதி பரிசோதனை பணிகள் 1.25 மணியளவில் நிறைவடைந்தன.
இந்த விபத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. சம்பவத்தின் காரணத்தை கண்டறிய தீயணைப்பு துறையின் விசாரணைப் பிரிவு மேலான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சம்பவத்தின் காணொலியும், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 22, 2026, 1:20 pm
இணையதளம் முதலீட்டு மோசடி: RM3.5 லட்சம் ரிங்கிட்டை இழந்த 34 வயது ஆடவர்
March 22, 2026, 12:57 pm
வியர்வை சிந்தி உழைத்தால் மட்டுமே விவசாயத்தில் வெற்றி பெற முடியும்: டத்தோ டி. மோகன்
March 22, 2026, 10:58 am
பினாங்கில் நிலவரி சர்ச்சை: அறிக்கை தயாரிக்கும் முதலமைச்சர் சௌ கோன் இயோவ்
March 22, 2026, 10:32 am
நோன்பு பெருநாள் போக்குவரத்து அதிகரித்ததால் சாலை விபத்துகளில் 26 பேர் மரணம்
March 22, 2026, 10:28 am
