நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இணையதளம் முதலீட்டு மோசடி: RM3.5 லட்சம் ரிங்கிட்டை இழந்த 34 வயது ஆடவர்

குவாந்தான்:

இணையதளம் வாயிலாகச் செயல்பட்ட போலி முதலீட்டுத் திட்டத்தில் சிக்கி, 34 வயதுடைய ஆடவர் ஒருவர் RM3,56,342 ரிங்கிட்டை இழந்துள்ளதாகப் புகார் அளித்துள்ளார். 

கடந்த பிப்ரவரி 18-ஆம் தேதி இணையதள விளம்பரம் ஒன்றைப் பார்த்த அந்த நபர், முதலீடு செய்யும் தொகைக்கு 10 சதவீத லாபம் கிடைக்கும் என நம்பி அதில் இணைந்துள்ளார்.

பாதிக்கப்பட்ட நபர் பிப்ரவரி 18 முதல் மார்ச் 19 வரையிலான காலகட்டத்தில், ஐந்து வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மொத்தம் 16 முறை பணப்பரிமாற்றம் செய்துள்ளார். 

ஆரம்பத்தில் ஊக்கத்தொகையாக RM1,000 ரிங்கிட்டை மட்டுமே திரும்பப் பெற்ற அவருக்கு, அதன் பிறகு வாக்குறுதி அளித்தபடி எவ்வித லாபமும் கிடைக்கவில்லை எனப் பகாங் மாநிலக் காவல்துறைத் தலைவர் டத்தோஸ்ரீ யஹாயா ஓத்மான் தெரிவித்துள்ளார்.

ஒரு கட்டத்தில் அந்த முதலீட்டு இணையதளத்தை அணுக முடியாமல் போனபோது தான் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்துள்ளார். இதற்காகத் தனது சேமிப்புப் பணம், நிறுவனத்தின் பணத்தைப் பயன்படுத்தியதாக அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இச் சம்பவம் குறித்துக் குற்றவியல் சட்டத்தின் 420-வது பிரிவின் கீழ் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

பொதுமக்கள் இது போன்ற அதிக லாபம் தரும் முதலீட்டுத் திட்டங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், அறிமுகமில்லாத இணையதளங்களில் பணத்தை முதலீடு செய்யும் முன் விழிப்புடன் இருக்குமாறும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset