செய்திகள் மலேசியா
நோன்பு பெருநாள் போக்குவரத்து அதிகரித்ததால் சாலை விபத்துகளில் 26 பேர் மரணம்
கோலாலம்பூர்:
ஈகைப் பெருநாள் பண்டிகைக்காக மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பத் தொடங்கிய நிலையில், நேற்று நாடு முழுவதும் 1,515 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன.
அவற்றில் 26 விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என்று போலிஸ் தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமையுடன் ஒப்பிடுகையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளது.
இருப்பினும் ஒட்டுமொத்த விபத்துகளின் எண்ணிக்கை 772 குறைந்துள்ளதாகவும் புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு, அமலாக்கத் துறை அறிவித்துள்ளது.
வியாழக்கிழமையன்று.மொத்தம் 2,287 விபத்துக்கள் பதிவாகின. இதில் 17 பேர் உயிரிழந்தனர்.
இதேபோன்ற ஒரு நிகழ்வில், இந்தப் பண்டிகைக் காலத்தில் சுமார் 23 லட்சம் வாகனங்கள் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீரான போக்குவரத்தையும், சாலைப் பயனாளிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக, மார்ச் 19 முதல் 24 வரை நடைபெறவுள்ள ஒரு சிறப்பு நடவடிக்கையில், மொத்தம் 5,544 போக்குவரத்துப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 22, 2026, 1:20 pm
இணையதளம் முதலீட்டு மோசடி: RM3.5 லட்சம் ரிங்கிட்டை இழந்த 34 வயது ஆடவர்
March 22, 2026, 12:57 pm
வியர்வை சிந்தி உழைத்தால் மட்டுமே விவசாயத்தில் வெற்றி பெற முடியும்: டத்தோ டி. மோகன்
March 22, 2026, 10:58 am
பினாங்கில் நிலவரி சர்ச்சை: அறிக்கை தயாரிக்கும் முதலமைச்சர் சௌ கோன் இயோவ்
March 22, 2026, 10:37 am
ஜார்ஜ்டவுனில் பட்டாசு விற்பனைக் கடை தீயில் சாம்பல்
March 22, 2026, 10:28 am
