செய்திகள் மலேசியா
மலேசியாவில் வெப்பம் அதிகரிப்பு: பல பகுதிகளில் முன்னெச்சரிக்கை அறிவிப்பு
கோலாலம்பூர்:
மலேசிய வானிலை ஆய்வு துறை இன்று கெடா மாநிலத்தின் படாங் டெராப் பகுதியில் இரண்டாம் நிலை கடும் வெப்ப எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த நிலை, தினசரி அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 40 அளவுக்குள் தொடர்ந்து மூன்று நாட்கள் நிலைத்திருப்பதை குறிக்கிறது.
இதனுடன், பெர்லிஸ், கெடா மாநிலத்தின் பல பகுதிகள் உள்ளிட்ட மொத்தம் 12 இடங்கள் முதல் நிலை முன்னெச்சரிக்கையில் உள்ளன.
மேலும் பினாங்கு, பேராக் மாநிலத்தின் உள்பகுதி, நெகிரி செம்பிலான் மாநிலத்தின் ரெம்பாவ் பகுதியும் இதில் அடங்குகின்றன. முதல் நிலை என்பது தினசரி 35 முதல் 37 அளவுக்குள் வெப்பநிலை நீடிப்பதை குறிக்கிறது.
இதேவேளை, இந்தோனேசியாவின் தென்மேற்கு சுமத்திரா பகுதியில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
5 அளவில் ஏற்பட்ட இந்த அதிர்வு 121 கிலோமீட்டர் ஆழத்தில் உருவாகி, சிலேகான் நகரத்திலிருந்து சுமார் 260 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் மலேசியாவிற்கு கடல்சுனாமி அபாயம் எதுவும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 22, 2026, 1:20 pm
இணையதளம் முதலீட்டு மோசடி: RM3.5 லட்சம் ரிங்கிட்டை இழந்த 34 வயது ஆடவர்
March 22, 2026, 12:57 pm
வியர்வை சிந்தி உழைத்தால் மட்டுமே விவசாயத்தில் வெற்றி பெற முடியும்: டத்தோ டி. மோகன்
March 22, 2026, 10:58 am
பினாங்கில் நிலவரி சர்ச்சை: அறிக்கை தயாரிக்கும் முதலமைச்சர் சௌ கோன் இயோவ்
March 22, 2026, 10:37 am
ஜார்ஜ்டவுனில் பட்டாசு விற்பனைக் கடை தீயில் சாம்பல்
March 22, 2026, 10:32 am
