செய்திகள் கலைகள்
உடையும் 30 ஆண்டு கூட்டணி: மணிரத்னம் அடுத்த படத்திற்கு இசையமைக்கப்போகும் ஜென்Z இசையமைப்பாளர்
சென்னை:
இயக்குநர் மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இசையமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இயக்குநர் மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி நடிக்க இருக்கிறார்கள். முழுக்க முழுக்க காதல் கதையாக இப்படம் உருவாக இருக்கிறது. இப்படத்திற்கு இசையமைக்க இளம் இசையமைப்பாளர் சாய் அப்யங்கரை மணிரத்னம் அனுகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 30 ஆண்டுகளாக மணிரத்னம் படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் மட்டுமே இசையமைத்து வந்த நிலையில் இந்த கூட்டணி தற்போது உடைகிறது.
1986 ஆம் ஆண்டு மெளன ராகம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு மணிரத்னம் அறிமுகமானார். மணிரத்னம் ஆரம்ப காலத்தில் இயக்கிய நாயகன் , அக்னி நட்சத்திரம் , கீதாஞ்சலி , அஞ்சலி , தளபதி ஆகிய படங்களுக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்தார். தளபதி படத்தில் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்படவே அடுத்த படமான ரோஜா படத்தில் ரஹ்மானை இசையமைக்க வைத்தார்.
இப்படத்தின் பாடல்கள் தமிழ் சினிமாவிற்கு ஒரு புதிய யுகத்தை துவக்கிவைத்தன . ரோஜா தொடங்கி கடந்த ஆண்டு வெளியான தக் லைஃப் யக்கிய அனைத்து படங்களுக்கும் ரஹ்மான் மட்டுமே இசையமைத்தார். இருவரும் இணைந்து கடந்த 30 ஆண்டுகளில் 15 படங்கள் வரை பணியாற்றியுள்ளார்கள்.
சாய் அப்யங்கர் இசை
அடுத்தபடியாக மணிரத்னம் காதல் கதை ஒன்றை இயக்கவிருக்கிறார். விஜய் சேதுபதி இந்த படத்தில் நாயகனாக நடிக்க சாய் பல்லவி நாயகியாக நடிக்க இருக்கிறார். இப்படத்திற்காக ப்ரீ ப்ரோடக்ஷன்ஸ் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த படத்திற்கு இசையமைக்க மணிரத்னம் சாய் அப்யங்கரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரபல பின்னணி பாடகர்களான திப்பு ஹரினி ஆகியோரது மகனான சாய் அப்யங்கர் ஆல்பம் பாடல்களை வெளியிட்டு பிரபலமானார். இதனைத் தொடர்ந்து அவருக்கு மெக பட்ஜெட் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்புகள் அமைந்துள்ளன.
கார்த்தி நடிக்கும் மார்ஷல் , தனுஷின் D55 , சூர்யாவின் கருப்பு , அட்லீ அல்லு அர்ஜூன் படம் என அடுத்தடுத்து பெரிய படங்களுக்கு இசையமைத்து வரும் சாய் அப்யங்கர் தான் அடுத்த சென்சேஷன் என அனைவரும் பேசி வருகிறார்கள். இதனை உறுதிசெய்யும் விதமாக மணிரத்னம் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 15, 2026, 11:38 am
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் பார்வையில் வில்லன்கள்: திரைக்கதையின் உயிரோட்டம்
September 15, 2026, 11:29 am
ONDRA RENDA -25 YEARS OF GVM : GVM-இன் ஹீரோக்கள் – ஸ்டைலுக்கும் உணர்வுக்கும் ஒரு முகம்
September 14, 2026, 5:25 pm
பிக் பாஸ் தமிழில் முதலமைச்சர் விஜய்யை சீண்டினாரா நடிகர் விஜய் சேதுபதி ? சமூக ஊடகங்களில் வெடித்தது கலவரம்
September 10, 2026, 4:45 pm
இசைஞானி இளையராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: சரிகமா இந்தியா டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்
September 7, 2026, 9:47 pm
உலக அழகி போட்டி: மலேசிய தமிழ்ப் பெண் தனுசியாவுக்கு 3-ஆம் இடம்
September 6, 2026, 4:19 pm
‘அரசன்’ திரைப்படம் கோலிவுட்டுக்கு பெருமை சேர்க்கும்”: சிலம்பரசன் நம்பிக்கை
September 5, 2026, 12:07 pm
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் - இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்: எப்போதும் ஸ்பெஷலான கோம்போ
September 5, 2026, 11:57 am
