செய்திகள் சிந்தனைகள்
ஷரீஅத் சட்டத்தை அமல்படுத்தி.. எங்களை எல்லாம் பின்தங்கிய காலத்துக்கு அழைத்துச் செல்ல விரும்புகிறீர்களா?” - வெள்ளிச் சிந்தனை
ஒருமுறை பிரபல இஸ்லாமிய அறிஞர் முஹம்மத் இமாரா இஸ்லாமிய ஷரீஅத் குறித்து உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார். அப்போது மதச்சார்பற்ற சிந்தனை கொண்ட ஒருவர் இடைமறித்து,
"அப்படியானால் ஷரீஅத் சட்டத்தை அமல்படுத்தி.. எங்களை எல்லாம் பின்தங்கிய காலத்துக்கு அழைத்துச் செல்ல விரும்புகிறீர்களா?” என்று கேட்டார்.
டாக்டர் இமாரா புன்னகைத்தவாறு கூறினார்:
"பின்தங்கிய காலம் என்று நீங்கள் எதைக் கூறுகிறீர்கள்? நூறு ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தையா? அல்லது அதற்கும் முந்தைய காலத்தையா?
சுல்தான் அப்துல் ஹமீத் ஆட்சியில்... உலகின் பாதிப் பகுதி இஸ்லாமியக் கொடியின்கீழ் இருந்த காலத்தையா?
அன்று கலீஃபாவின் அனுமதியின்றி ஒரு முடிவை எடுக்க ஒட்டுமொத்த ஐரோப்பிய உலகமும் நடுங்கியதே அந்த காலத்தையா?
அல்லது உலகையே அச்சுறுத்தி, மனித குலத்தை துவம்சம் செய்துகொண்டிருந்த மங்கோலியப் படைகளை தோற்கடித்து, உலகில் மீண்டும் நீதியின் கொடியை பறக்கவிட்ட மமாலிக்குகளின் காலத்தையா?
அல்லது அறிவு, நீதி, நாகரிகத்தால் நிமிர்ந்து நின்ற பாக்தாத் நகரம் உலகின் தலைநகராக விளங்கிய அப்பாஸியர்களின் காலத்தையா?
அல்லது பிரான்ஸ், சீனா, மொராக்கோ முதலிய தேசங்களின் வாசல்கள் வரை இஸ்லாத்தின் கொடியை எட்டச் செய்த உமைய்யாக்களின் காலத்தையா?
அல்லது "ரோமானிய பைசாந்திய அரசனுக்கு.. அமீருல் முஃமினீன் ஹாரூன் ரஷீத் எழுதுவது..” என்ற கடிதம் வந்தபோது ரோமானிய அரசின் அரியணை அச்சத்தால் குலுங்கியதே.. அந்த காலத்தையா?
அல்லது உலகுக்கே மருத்துவம், வானியல், பொறியியல், தத்துவம் ஆகியவற்றை கற்பித்த இப்னு ஸீனா, அல்குவாரிஸ்ம், இப்னு ருஷ்த், இப்னு கல்தூன் ஆகியோரின் காலத்தையா?
அல்லது ரோம் நகரில் தவித்த ஒரு முஸ்லிம் பெண், "ஓ.. முஃதஸிமா..!” என்று அழைத்தபோது, அவளைக் காப்பாற்ற ஒரு ராணுவத்தையே அனுப்பி வைத்த கலீஃபா முஃதஸிமுடைய காலத்தையா?
அல்லது ஐரோப்பாவில் முதல் பல்கலைக் களகத்தை நிறுவிய முஸ்லிம்களின் காலத்தையா?
அல்லது பட்டம் வாங்கும் முஸ்லிம்கள் தங்கள் தொப்பிகள் மீது குர்ஆனைச் சூடியிருந்த காட்சியைப் பார்த்து, மேற்கத்திய நாடுகள் பட்டமளிப்பு அங்கியை ஏற்றுக்கொண்ட காலத்தையா?
அல்லது உலகின் மிக அழகான நகரமாக கெய்ரோ காட்சியளித்த காலத்தையா?
அல்லது ஈராக்கின் ஒரு தீனார் அமெரிக்காவின் 483 டாலர்கள் மதிப்புடையதாக இருந்த காலத்தையா?
அல்லது ஐரோப்பியர்களே வாழ்வாதாரம் தேடி அலெக்சாண்டிரியாவுக்கு வந்த காலத்தையா?
அல்லது பஞ்சத்திலிருந்து காப்பாற்றும்படி எகிப்திடம் அமெரிக்க அரசு கெஞ்சிய (1940) காலத்தையா?
அல்லது நீதி என்பது வெறும் அரசியல் அமைப்புகளிலும் காகிதங்களிலும் எழுதப்படாமல், பூமியில் நடைமுறையில் இருந்த உமர் (ரலி) அவர்களுடைய காலத்தையா?
சொல்லுங்கள் நண்பரே! எது பின்தங்கிய காலம்?
கடந்த காலத்தை நாம் வெறும் ஒரு காலமாக அழைக்கவில்லை. மாறாக அத்தகைய பெருமைகளை உருவாக்கிய விழுமியங்களையே அழைக்கிறோம்.
அநீதிக்காக அல்ல.. நீதிக்காக அழைக்கிறோம்! இருளுக்காக அல்ல.. ஒளிவீச அழைக்கிறோம்!
உலகை வழிநடத்தும் ஒரு கொள்கையாக இஸ்லாம் மாற வேண்டும் என்று அழைக்கிறோம்!”
இவ்வாறு டாக்டர் இமாரா பேசப்பேச அரங்கம் ஆச்சரியத்தால் அசைவற்று உறைந்து நின்றது.
ஆம்! அத்தைகைய காலம் வெகு சீக்கிரம் வரத்தான் போகிறது. அமெரிக்கா இப்போதே ஆட்டம் காணத் தொடங்கிவிட்டது.
உலகின் தலைமை மேற்குலகின் கைகளில் இருந்து இஸ்லாத்தின் கைகளுக்கு மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை. இன்ஷா அல்லாஹ்!
- நூஹ் மஹ்ழரி
தொடர்புடைய செய்திகள்
April 19, 2026, 10:55 pm
தமிழக தேர்தல் களம்: த வெ க வேட்பாளர்கள் வழிகாட்டுதலின்றி தவிக்கும் அவல நிலை
April 18, 2026, 6:27 pm
இதுவரை நடந்தது போதும் - Enough is enough: இஸ்ரேல் மீது டிரம்ப் பாய்ச்சல்
April 17, 2026, 8:11 am
சுய திருப்தியும், தற்பெருமையும் மோசமான குணங்கள் - வெள்ளிச் சிந்தனை
April 16, 2026, 9:55 pm
பிரிட்டனை ஆபத்து நெருங்குகிறதா? - ஓர் அரசியல் பார்வை
April 12, 2026, 12:12 pm
இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா, ஈரான் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை எவ்வித முடிவும் இன்றி முறிந்தது
April 10, 2026, 9:11 am
புன்னகைக்க மறக்காதீர்கள்: வெள்ளிச் சிந்தனை
April 8, 2026, 9:29 pm
சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி சமரசம் செய்து சாதித்தது பாகிஸ்தான்
April 3, 2026, 9:42 am
ஒழுங்கமைத்தல் என்பது இஸ்லாத்தின் முக்கியமான பண்புகளில் ஒன்று - வெள்ளிச் சிந்தனை
April 1, 2026, 6:48 am
