செய்திகள் மலேசியா
குடும்ப வன்முறை: கர்ப்பிணி மனைவியைத் தாக்கிய கணவர் கைது
மலாக்கா:
ஜாசின், தாமான் ஸ்ரீ கெமெண்டோர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வைத்துத் தனது கர்ப்பிணி மனைவியைத் தாக்கியதாகக் கூறப்படும் 22 வயது இளைஞரை மலாக்கா காவல்துறை இன்று கைது செய்தது.
மலாக்கா மாநிலக் காவல்துறை தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், ஊழியர்கள் அடங்கிய குழுவினர், இன்று காலை 11 மணியளவில் இந்த அதிரடிச் சோதனையை மேற்கொண்டு சந்தேக நபரைத் தடுத்து வைத்தனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கோத்தா ஷபண்டாரில் உள்ள ஒரு கேளிக்கை மையத்தில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்துப் புகார்கள் எழுந்தன. இச்சம்பவம் தொடர்பாகத் தேடப்பட்டு வந்த நபரே தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக மலாக்கா மத்திய மாவட்டக் காவல்துறைத் தலைவர் ஏசிபி கிறிஸ்டோபர் பாடிட் உறுதிப்படுத்தியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாகப் பொதுமக்கள் ஏதேனும் தகவல்களை அறிந்திருந்தால், அருகிலுள்ள காவல் நிலையத்திலோ அல்லது மாவட்டக் காவல்துறை தலைமையகத்திலோ தெரிவிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
தற்போது இந்த வழக்கு, தண்டனைச் சட்டத்தின் 323-வது பிரிவு, 1994-ஆம் ஆண்டு குடும்ப வன்முறைச் சட்டத்தின் 18A பிரிவின் கீழ் தீவிரமாக விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
அதேவேளையில், இந்தச் சம்பவம் குறித்துப் பொதுமக்களிடையே வீண் வதந்திகளையோ பரப்ப வேண்டாம் என்றும், அது காவல்துறையின் விசாரணைக்கு இடையூறாக அமையும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 19, 2026, 10:23 pm
பெர்லிஸ் மாநிலத்தில் ‘ஓப்ஸ் பெரந்தாவ்' அமலாக்க திட்டம்
March 19, 2026, 9:51 pm
நோன்புப் பெருநாளை முன்னிட்டு அலைபோல் திரண்ட வாகனங்களினால் நிரம்பிய முக்கிய நெடுஞ்சாலைகள்
March 19, 2026, 9:49 pm
நிச்சயமற்ற சூழலில் செலவு செய்யும் போது மக்கள் கவனமாக இருக்க வேண்டும்: சிலாங்கூர் சுல்தான்
March 19, 2026, 9:48 pm
நாட்டின் வரலாற்றிலேயே மிக உயர்ந்த விலையில் டீசல் விற்பனை பொருத்தமற்றது: ஹம்சா
March 19, 2026, 9:48 pm
கோத்தா திங்கியில் பயங்கர விபத்து
March 19, 2026, 9:47 pm
புக்கிட் டாமன்சாராவில் மினி கேசினோவை நடத்தி வந்த கும்பல் முறியடிக்கப்பட்டது: போலிஸ்
March 19, 2026, 9:47 pm
"ஒற்றுமையே நாட்டின் பலம்": மலாய்-இந்திய சமூகத்தின் பேச்சுவார்த்தையைப் பாராட்டிய பிரதமர்
March 19, 2026, 9:45 pm
