நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெர்லிஸ் மாநிலத்தில் ‘ஓப்ஸ் பெரந்தாவ்' அமலாக்க திட்டம்

காங்கார்: 

பெர்லிஸ், அராவ் ரமலான் சந்தையில் கடந்த மார்ச் 2 முதல் 4-ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட 'மை சேவ் ஃபுட்' (MySaveFood) திட்டத்தின் மூலம், 474.3 கிலோகிராம் எடையுள்ள உணவுகளும் பானங்களும் வெற்றிகரமாகச் சேகரிக்கப்பட்டன. 

இதில் 159.3 கிலோ உணவுப் பொருட்கள், 315 கிலோ பானங்கள் அடங்கும். இவை அனைத்தும் அடையாளம் காணப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள், பாதுகாப்புப் படையினர் உட்படத் தேவையுள்ள தரப்பினருக்கு முறையாக விநியோகிக்கப்பட்டன.

2030-ஆம் ஆண்டிற்குள் உலகளாவிய உணவு வீணாவதைக் குறைக்கும் நிலையான வளர்ச்சி இலக்கை நோக்கிய முயற்சியாக இது அமைந்திருந்தது.

இதற்கிடையில், எதிர்வரும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு பெர்லிஸ் திடக்கழிவு மேலாண்மையும், பொதுத் தூய்மைக் கழகமும் (SWCorp) 'ஓப்ஸ் பெரந்தாவ்' (Ops Perantau), 'மெகா ராயா' பெருங்கழிவு சேகரிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. 

மார்ச் 7 முதல் 21-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தச் சிறப்பு நடவடிக்கையின் மூலம் குடியிருப்புகள், பொது இடங்கள், நோன்புப் பெருநாள் சந்தைகளில் தூய்மைப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, வெடிபொருட்களின் கழிவுகள் முறையற்ற குப்பைக் கொட்டல்களைக் கட்டுப்படுத்த இக்கழகம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.

இந்தத் தூய்மைப் பணிகள் 'Environment Idaman’ நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படுகின்றன. பெருநாள் காலத்தில் பொதுமக்கள் சுத்தமான, பொலிவான சூழலில் கொண்டாட்டங்களை முன்னெடுக்கத் தேவையான அனைத்துத் துப்புரவுப் பணிகளும் கூடுதல் பணியாளர்களைக் கொண்டு துரிதப்படுத்தப்படும் எனப் பெர்லிஸ் தூய்மைக் கழகத்தின் இயக்குனர் ஃபாடில் இட்ரிஸ் தெரிவித்துள்ளார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset