செய்திகள் கலைகள்
‘கேடி: தி டெவில்’ பாடல் வரிகளில் ஆபாசம்: யூடியூபிலிருந்து நீக்கம்
மும்பை:
துருவா சர்ஜா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள பான் இந்தியா படம், ‘கேடி: தி டெவில்’. இதில் சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி, வி. ரவிச்சந்திரன், ரமேஷ் அரவிந்த், ரீஷ்மா நானையா, நோரா ஃபதேஹி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பிரேம் இயக்கி உள்ள இப்படத்தை கே. வி. என் புரொடக்ஷன்ஸ் சார்பில் வெங்கட் கே. நாராயணா தயாரித்துள்ளார். அர்ஜுன் ஜன்யா இசையமைத்துள்ள இப்படம், ஏப் 30-ல் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் வெளியாகிறது.
இப்படத்தில் இருந்து சமீபத்தில் குத்துப்பாடல் ஒன்று பல்வேறு மொழிகளில் வெளியானது. அப்பாடலில் நோரா ஃபதேஹி, சஞ்சய் தத் இணைந்து ஆடியிருந்தனர். இப்பாடலை இந்தியில் ரகிப் ஆலம் என்பவர் எழுதியுள்ளார். அப்பாடல் வெளியான சில மணிநேரங்களிலேயே கடும் எதிர்ப்புகளைச் சந்தித்தது.
இரட்டை அர்த்தம் கொண்ட ஆபாசமான வார்த்தைகள் இடம்பெற்றிருப்பதாகக் கூறி கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. நடன அசைவுகளும் முகம் சுளிக்க வைக்கும் வகையில் இருப்பதாகப் புகார்கள் எழுந்தன. இந்தி பாடகர் அர்மான் மாலிக், இயக்குநர் ஓனிர் உள்பட பல பிரபலங்களும் இப்பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
கீழ்த்தரமான பாடல் என்று தங்கள் அதிருப்தியைத் தெரிவித்திருந்தனர். இந்தப் பாடலில் பயன்படுத்தப்பட்டுள்ள ஆபாசமான வரிகள் மற்றும் காட்சிகள் தொடர்பாகத் தேசிய மனித உரிமைகள் ஆணையம் படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பி, பாடலை உடனடியாக நீக்க உத்தரவிட்டது. இதனால், இப் பாடல் யூடியூப் தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, சமூக ஆர்வலரும் வழக்கறிஞரான வினீத் ஜிண்டால் என்பவர், இந்தப் பாடலுடன் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டெல்லி போலீஸில் புகார் அளித்துள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 15, 2026, 11:38 am
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் பார்வையில் வில்லன்கள்: திரைக்கதையின் உயிரோட்டம்
September 15, 2026, 11:29 am
ONDRA RENDA -25 YEARS OF GVM : GVM-இன் ஹீரோக்கள் – ஸ்டைலுக்கும் உணர்வுக்கும் ஒரு முகம்
September 14, 2026, 5:25 pm
பிக் பாஸ் தமிழில் முதலமைச்சர் விஜய்யை சீண்டினாரா நடிகர் விஜய் சேதுபதி ? சமூக ஊடகங்களில் வெடித்தது கலவரம்
September 10, 2026, 4:45 pm
இசைஞானி இளையராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: சரிகமா இந்தியா டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்
September 7, 2026, 9:47 pm
உலக அழகி போட்டி: மலேசிய தமிழ்ப் பெண் தனுசியாவுக்கு 3-ஆம் இடம்
September 6, 2026, 4:19 pm
‘அரசன்’ திரைப்படம் கோலிவுட்டுக்கு பெருமை சேர்க்கும்”: சிலம்பரசன் நம்பிக்கை
September 5, 2026, 12:07 pm
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் - இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்: எப்போதும் ஸ்பெஷலான கோம்போ
September 5, 2026, 11:57 am
