நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய முஸ்லிம் வர்த்தகர்களின் பிரச்சினைகள்; மனிதவள அமைச்சுடன் மிம்கோய்ன் இணைந்து செயல்படும்: டத்தோ அப்துல் ஹமித்

புத்ராஜெயா:

இந்திய முஸ்லிம் வர்த்தகர்களின் பிரச்சினைகள் தொடர்பில் மனிதவள அமைச்சுடன் மிம்கோய்ன் இணைந்து செயல்படும்.

மிம்கோய்ன் தலைவர் டத்தோ ஹாஜி பிவி அப்துல் ஹமித் இதனை கூறினார்.

மனிதவள அமைச்சராக பொறுப்பேற்றுள்ள டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணனை மரியாதை நிமிர்த்தமாக மிம்கோய்ன் உயர்மட்ட தலைவர்களோடு சந்தித்தேன்.

அமைச்சின் தலைமையகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் பல முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மலேசியா பொருளாதார மேம்பாட்டில் இந்திய முஸ்லிம் வர்த்தகர்களின் பங்களிப்பு மிகவும் அதிகமாகும்.

இருந்தாலும் இந்த வர்த்தகர்கள் பல்வேறான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.

குறிப்பாக அந்நியத் தொழிலாளர்கள் விவகாரம் நீண்டதொரு இழுப்பறியாகவே இருந்து வருகிறது.

இப்பிரச்சினைகளுக்கு அமைச்சு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அதே வேளையில் மனிதவள அமைச்சின் வாயிலான பயிற்சித் திட்டங்கள் உட்பட இதர வாய்ப்புகள் இந்திய முஸ்லிம் வர்த்தகர்களுக்கும் பயனளிக்க வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

இந்த கோரிக்கைகள் அனைத்தையும் செவிமடுத்த அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன், நம்பிக்கையான பதிலை தந்தார்.

குறிப்பாக அந்நியத் தொழிலாளர்கள் விவகாரத்திற்கு நிரந்தரமான தீர்வுக்கான வழிகளை அமைச்சு ஆராய்ந்து வருகிறது என அமைச்சர் கூறினார்.

அமைச்சருடனான இந்த சந்திப்பு எங்களுக்கு புதிய நம்பிக்கையை தருகிறது என்று டத்தோ அப்துல் ஹமித் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset