நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாநில பலம் போதாது, தேசிய வெற்றி அவசியம்: இஸ்கண்டார்

பெட்டாலிங் ஜெயா: 

கிழக்குக் கரை, ‘மலாய் பெல்ட்’ பகுதிகளில் உள்ள ஆதரவு மட்டுமே, பெரிக்காத்தான் நேஷனல் (PN) கூட்டணிக்கு மத்திய அரசை கைப்பற்ற போதுமானதாக இருக்காது என்று PAS பொருளாளர் இஸ்கண்டார் அப்துல் சமத் தெரிவித்துள்ளார்.

PAS உட்பட PN கூட்டணி கிளந்தான், திரெங்கானுவில் வலுவாகவும் கெடா, பேராக் பகுதிகளில் தாக்கம் செலுத்தினாலும், அது தேசிய அளவில் வெற்றியை உறுதி செய்யாது என்று அவர் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

“நாம் நமது பலமான பகுதிகளில் அனைத்து தொகுதிகளையும் வென்றுள்ளோம் என்பதால் மட்டும், டாக்டர் சாம் (அஹ்ம்மத் சாம்சுரி மொக்தார்) பிரதமராகிவிட்டார் என்று அர்த்தமில்லை,” என அவர் கூறினார். மேலும், திரெங்கானு முதலமைச்சரான சாம்சுரி PN தலைவர் பதவியை ஏற்றது, அவர் பிரதமர் வேட்பாளராக கருதப்படுகிறார் என்பதற்கான அறிகுறி என்றும் குறிப்பிட்டார்.

அடுத்த பொதுத் தேர்தலில் (GE16) புத்ராஜெயாவை கைப்பற்ற விரும்பினால், ஜொகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான், சிலாங்கூர், பஹாங், பேராக், பினாங்கு, பெர்லிஸ், சபா, சரவாக் ஆகிய மாநிலங்களிலும் PN வலுவாக வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

தற்போதைய அரசியல் சூழலில், அனைத்து மாநிலங்களிலும் ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு அவசியம் என்றும், ஒரு பகுதியில் கிடைக்கும் வெற்றி மட்டும் தேசிய வெற்றியை உறுதி செய்யாது என்றும் அவர் கூறினார்.

“நாம் ஒருவரை ஒருவர் பொருட்படுத்தாமல் தனித்தனியாக செயல்பட முடியாது. நமது கூட்டாளர்கள் சிரமத்தில் இருக்கும்போது, நாமே வெற்றி பெற்றோம் என்று பெருமை கொள்ள முடியாது.

“எங்கள் கூட்டாளிகள் தோல்வியடைந்தால், அது எங்களுக்கும் பெரிய தோல்வியாக மாறும்,” என்று அவர் தெரிவித்தார்.

PAS துணைத் தலைவருமான சாம்சுரி, பிப்ரவரி 22 அன்று பெர்சாத்து தலைவர் முஹியிடின் யாசீனுக்குப் பதிலாக PN தலைவராக நியமிக்கப்பட்டார்.

இந்த நியமனம், GE16 தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளராக சாம்சுரியை முன்னிறுத்துகிறது என்று PAS இளைஞர் பிரிவு உள்ளிட்ட பல தரப்புகள் கருதுகின்றன.

எனினும், PN தலைவர் பதவி பெற்றதாலேயே ஒருவர் பிரதமர் வேட்பாளராக உறுதி செய்யப்பட மாட்டார் என்று முஹைதீன் தெரிவித்துள்ளார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset