நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்தியா விசா கட்டுப்பாடுகள்: வங்காளதேச நோயாளிகளை இலக்காகக் கொண்ட மலேசியா

பெட்டாலிங் ஜெயா: 

இந்தியாவுக்கு சிகிச்சைக்காக பயணம் செய்யும் வங்காளதேச நோயாளிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள விசா கட்டுப்பாடுகள் காரணமாக, மலேசியா தற்போது அந்த நாட்டைச் சேர்ந்த மருத்துவ பயணிகளை ஈர்க்கும் முயற்சிகளை அதிகரித்துள்ளது.

 2026ஆம் ஆண்டிற்கான “மலேசியா மருத்துவ சுற்றுலா ஆண்டு” முயற்சியின் ஒரு பகுதியாக, வங்காளதேசத்துடன் தொடர்புகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படுத்தி இதன் மூலம் மலேசியாவை உலகளாவிய சுகாதார சுற்றுலா முன்னணித் தளமாக நிலைநிறுத்தவுள்ளதாக மலேசிய சுகாதார பயண கவுன்சில் (MHTC) தெரிவித்துள்ளது.

பல ஆண்டுகளாக, வங்காளதேச நோயாளிகள் அருகில், பரிந்துரை வலையமைப்புகளின் காரணமாக பெரும்பாலும் இந்தியாவைத் தேர்வு செய்து வந்தனர். ஆனால், கடுமையான விசா விதிமுறைகள் காரணமாக, பல நோயாளிகளும் சுகாதார சேவை ஒருங்கிணைப்பாளர்களும் மாற்று நாடுகளை தேடத் தொடங்கியுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக, ஏப்ரல் 5 முதல் 12 வரை டாக்காவில் “மலேசியா ஹெல்த்கேர் வீக்” நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இதில் சுகாதார ஒருங்கிணைப்பாளர்கள், பயண கூட்டாளர்கள், சிகிச்சை தேடும் நோயாளிகள் மலேசியாவின் முன்னணி மருத்துவமனைகளுடன் இணைக்கப்படுவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

“வங்காளதேசம் எங்களுக்கு முக்கியமான சந்தையாகும். வெளிநாடுகளில் நம்பகமான, உயர்தர சிகிச்சையை நாடும் வங்காளதேச நோயாளிகளின் ஆர்வம் அதிகரித்து வருகிறது,” என்று MHTC தலைமை செயல் அதிகாரி சூரியாகாந்தி சுப்பையா தெரிவித்தார்.

“டாக்காவில் நடைபெறும் இந்த முயற்சிகள் மூலம், மலேசியாவின் சுகாதார அமைப்பை அங்குள்ள கூட்டாளர்களுக்கும் நோயாளிகளுக்கும் அருகில் கொண்டு செல்வதுடன், பரிந்துரை வலையமைப்புகளை வலுப்படுத்தவும், மலேசியாவின் மருத்துவ திறனையும் நோயாளர் மையப்படுத்தப்பட்ட சேவைகளையும் வெளிப்படுத்தவும் முடியும்,” என்றார் அவர்.

மேலும், இதய நோய், புற்றுநோய், உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை, மேம்பட்ட இதர அறுவை சிகிச்சைகள் போன்ற சிறப்பு சிகிச்சைகளின் தேவையால் வங்காளதேச நோயாளிகள் வெளிநாடுகளில் சிகிச்சை தேடுகின்றனர் என்று  அவர் குறிப்பிட்டார்.

டாக்கா, கோலாலம்பூர் இடையே தினசரி பல விமான சேவைகள் இருப்பதால், மலேசியா எளிதில் அணுகக்கூடிய நாடாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

மலேசியா தற்போது தாய்லாந்து, சிங்கப்பூர் போன்ற பிராந்திய மருத்துவ சுற்றுலா மையங்களுடன் போட்டியிடும் வகையில் தன்னை நிலைநிறுத்தி வருகிறது. 

சர்வதேச பயிற்சி பெற்ற நிபுணர்கள், நவீன மருத்துவ வசதிகள், போட்டித்திறன் வாய்ந்த சிகிச்சை செலவுகள் ஆகியவை இதன் பலமாகும்.

2025ஆம் ஆண்டில், மலேசியாவின் சுகாதார சுற்றுலா துறை RM3.34 பில்லியன் வருவாய் ஈட்டியதுடன், 1.84 மில்லியன் மருத்துவ பயணிகளை ஈர்த்துள்ளது. இது அந்தத் துறையில் நாட்டின் வளர்ச்சியையும் புகழையும் வெளிப்படுத்துகிறது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset