செய்திகள் மலேசியா
ஸ்ரீ முருகன் நிலையத்தின் கல்வி யுத்தம்; பேரா மாநில இந்திய மாணவர்களிடையே கல்வி புரட்சியை ஏற்படுத்தும்: சேகர் நாராயணன்
ஈப்போ:
ஸ்ரீ முருகன் நிலையத்தின் கல்வி யுத்தம் திட்டம் பேரா மாநில இந்திய மாணவர்களிடையே கல்வி புரட்சியை ஏற்படுத்தும்.
பேரா மாநில ஸ்ரீ முருகன் நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சேகர் நாராயாணன் இதனை கூறினார்.
பேரா மாநில ஸ்ரீமுருகன் நிலைய ஏற்பாட்டில் கிந்தா இந்தியர் சங்க மண்டபத்தில் "கல்வி யுத்தம்" நிகழ்ச்சியை மலேசிய சட்டத்துறை துணையமைச்சர் எம். குலசேகரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்துவைத்து உரையாற்றினார்.
கல்வியில் சிறப்பான தேர்ச்சி பெறுவது மாணவர்களின் கைகளில் இருக்கிறது.
எந்த அளவு முயற்சியும் பயிற்சியும் அவர்கள் எடுக்கிறார்களோ அந்த அளவுக்கு அதிகமான புள்ளிகளை அவர்கள் எடுக்கமுடியும். எனினும் அவர்களுக்கு வழிகாட்டுதல் மிகவும் முக்கியம்.
மாணவர்களுக்கு வழிகாட்ட இன்று ஸ்ரீமுருகன் மையம் போன்ற தன்னார்வ அமைப்புகள் சிறப்பான சேவைகளை வழங்கிவருகின்றன.
"நான் படிக்கும் காலத்தில் டியூசன் வகுப்புகளுக்குச் செல்வதே ஒரு கனவு போல இருந்தது. இன்று உங்களுக்கு எல்லா வாய்ப்புகளும் வசதிகளும் உள்ளன.
பள்ளி காலத்தில் பாடங்களில் மட்டுமே உங்கள் கவனம் இருக்கவேண்டும். எதிர்காலம் குறித்த தெளிவான குறிக்கோள் இருக்க வேண்டும் என்று குலசேகரன் கேட்டு கொண்டார்.
மேலும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த நான் பள்ளிக்கூடம் விட்டு வீடு வந்தபிறகு மாடுகளை மேய்ச்சலுக்குக் கொண்டு சென்றவாறே பாடங்களையும் கற்றேன்.
ஆனால் லண்டன் செல்லவேண்டும், பட்டம் பெறவேண்டும் என்ற எண்ணம் மட்டும் என்னுள் கொளுந்துவிட்டு எரிந்துகொண்டே இருந்தது. அந்தக் குறிக்கோள் இன்று நிறைவேறி நல்ல நிலையில் இருக்கிறேன்.
நீங்களும் உங்கள் குறிக்கோளில் உறுதியோடும் தெளிவோடும் இருந்தால் வாழ்வில் சிறந்து விளங்கமுடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து ஸ்ரீமுருகன் மையத்தில் தன்னலமற்றச் சேவைகளை வழங்கிவரும் ஆசிரியர்களுக்கும் தொண்டர்களுக்கும் எம். குலசேகரன் சிறப்புசெய்தார்.
இந்நிகழ்ச்சியில் மலேசிய ஸ்ரீமுருகன் கல்வி நிலையத்தின் இயக்குநர் சுரேன் கந்தா, மலேசிய ஸ்ரீமுருகன் மைய இணை இயக்குநரும் ஜொகூர் மாநில ஒருங்கிணைப்பாளருமான பி. சுப்பிரமணியம் உட்பட மேலும் பலர் மாணவர்களுக்குத் தன்முனைப்பூட்டும் உரைகளை ஆற்றினர்.
பேரா மாநில ஸ்ரீமுருகன் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சேகர் நாராயாணன் வரவேற்புரையாற்றினார்.
கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு தொய்வுநிலை கண்டிருந்த ஸ்ரீமுருகன் மையம் மாணவர்களுக்குச் கல்விச்சேவையை ஆற்றுவதில் மீண்டும் தீவிர கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது.
அதற்கு முத்தாய்ப்பாக இந்த கல்வி யுத்தம் நிகழ்ச்சி அமைந்துள்ளது.
ஈப்போ மையத்தில் நான்கு முதல் ஆறு வரையிலான ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கும் படிவம் ஒன்று முதல் மூன்று வரையிலான இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கும் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
1982ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஸ்ரீமுருகன் மையம் இப்போது 44 ஆம் ஆண்டில் காலடி எடுத்துவைத்துள்ளது.
இந்தக் காலகட்டத்தில் ஆயிரக் கணக்கான இந்திய மாணவர்களைப் பட்டதாரிகளாக்கி உயர்நிலையில் இருப்பதற்கு ஸ்ரீமுருகன் மையம் துணைநின்றுள்ளது என்பதை இன்று பெருமையோடு கூறிக்கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.
தவிர, நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்கிய அனைவருக்கும் முனைவர் சேகர் நாராயணன் நன்றியைத்
தெரிவித்துக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்கள், ஸ்ரீமுருகன் மையப் பொருப்பாளர்கள், பெற்றோர்கள், மாணவர் உட்பட சுமார் 700 பேர் கலந்துகொண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 18, 2026, 11:57 am
RM7 ரிங்கிட்டிற்கு கோழி விற்பனை: புக்கிட் காந்தாங்கில் அலைமோதிய கூட்டம்
March 18, 2026, 10:52 am
மேற்காசிய பதற்றம் தாக்கம்: மலேசிய எரிசக்தி செலவில் அழுத்தம்
March 18, 2026, 10:50 am
ரமலானில் மாற்று நடைமுறை: உணவுக்கு பதில் அத்தியாவசிய பொருட்களை வழங்கிய அர்-ரஹ்மான் பள்ளிவாசல்
March 18, 2026, 10:48 am
கோலாலம்பூரில் அதிரடி சோதனை: போலி கடிகார விற்பனைக்கு முற்றுப்புள்ளி
March 18, 2026, 10:34 am
மாநில பலம் போதாது, தேசிய வெற்றி அவசியம்: இஸ்கண்டார்
March 18, 2026, 10:30 am
தந்தை கண்முன்னே மகனை முதலை இழுத்துச் சென்ற துயரம்
March 18, 2026, 10:29 am
