செய்திகள் மலேசியா
கோலாலம்பூரில் அதிரடி சோதனை: போலி கடிகார விற்பனைக்கு முற்றுப்புள்ளி
கோலாலம்பூர்:
உள்நாட்டு வர்த்தகம், வாழ்வாதாரச் செலவுக் கட்டுப்பாட்டு அமைச்சின் அமலாக்கப் பிரிவு, வர்த்தக முத்திரைச் சட்டத்தின் கீழ் மார்ச் 13ஆம் தேதி மேற்கொண்ட திடீர் சோதனையில், தலைநகரில் செயல்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட போலி பிராண்ட் கடிகாரங்களை சேமித்து விற்பனை செய்த நிலையம் ஒன்றை முற்றுகையிட்டது.
ஒரு மாத கால நுண்ணறிவு சேகரிப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில், 790க்கும் மேற்பட்ட பிரபல பிராண்டுகளின் போலி கடிகாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கூடுதலாக, பெட்டிகள், பிராண்ட் பைகள் உள்ளிட்ட விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டன. மொத்த பறிமுதல் மதிப்பு சுமார் 7 லட்சத்து 90 ஆயிரம் ரிங்கிட்டாக மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆரம்ப விசாரணையில், இந்த நடவடிக்கையை 30 வயதிற்குள் உள்ள உள்ளூர் நபர் ஒருவர் நிர்வகித்து வந்தது தெரியவந்துள்ளது. இரு மாடி கொண்ட இந்த நிலையத்தில் கீழ்தளம் கடிகார பழுதுபார்ப்புப் பணிக்காக பயன்படுத்தப்பட்டு, மேல்தளம் போலி கடிகாரங்களை சேமித்து விற்பனை செய்ய பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக இருந்ததுடன், பாதுகாப்பு வசதிகளும் கடுமையாக அமைக்கப்பட்டிருந்தன. போலி கடிகாரங்கள் வெளிநாட்டு விநியோகஸ்தர்களிடமிருந்து கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்றது.
சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது. சட்டவிரோதமாக போலி பொருட்களை விற்பனை செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். பொதுமக்கள் இதுகுறித்த தகவல்களை அதிகாரப்பூர்வ வழிகளின் மூலம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 18, 2026, 10:34 am
மாநில பலம் போதாது, தேசிய வெற்றி அவசியம்: இஸ்கண்டார்
March 18, 2026, 10:30 am
தந்தை கண்முன்னே மகனை முதலை இழுத்துச் சென்ற துயரம்
March 18, 2026, 10:29 am
இந்தியா விசா கட்டுப்பாடுகள்: வங்காளதேச நோயாளிகளை இலக்காகக் கொண்ட மலேசியா
March 18, 2026, 10:28 am
துன் டாக்டர் மஹாதீர் மீண்டும் அம்னோவில் சேர விரும்பினாலும் வரவேற்கப்படும்: அஹ்மத் மஸ்லான்
March 18, 2026, 9:53 am
ரந்தாவ் பஞ்சாங் எல்லையில் திரளும் வாகனங்கள்: ஹரிராயாவை முன்னிட்டு கடும் நெரிசல்
March 18, 2026, 6:14 am
