நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தந்தை கண்முன்னே மகனை முதலை இழுத்துச் சென்ற துயரம்

கினபத்தாங்கான்: 

கம்போங் செகாலியுட் பகுதியில் உள்ள ஆற்றில், தந்தை கண்முன்னே மகன் முதலை தாக்குதலுக்கு உள்ளாகி இழுத்துச் செல்லப்பட்ட பரிதாப சம்பவம் நேற்று இரவு நிகழ்ந்துள்ளது.

28 வயதான ரைய்யான் அப்துல்லாவை இறால் பிடிக்க வலை வீசிக் கொண்டிருந்தபோது முதலை தாக்கியுள்ளது என்று கினபத்தாங்கான் தீயணைப்பு, மீட்பு நிலைய தலைவர் ஹைரி ஒத்தூ தெரிவித்துள்ளார்.

“சம்பவ இடத்தில் இருந்த அவரது தந்தை இந்தத் தாக்குதலை நேரில் பார்த்துள்ளார். இரவு 8.22 மணிக்கு சம்பவம் குறித்து தகவல் கிடைத்தது,” என அவர் இன்று பெர்னாமாவிடம் தெரிவித்தார்.

மீட்பு குழுவினர் இரவு 9.10 மணிக்கு சம்பவ இடத்துக்கு வந்து தகவல்கள் சேகரித்து உடனடியாக தேடுதல், மீட்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர்.

இன்று காலை வரை பாதிக்கப்பட்டவர் கண்டுபிடிக்கப்படவில்லை. தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset